»   »  "சினா கானா"வுக்கு ஜோடியாகும் நயன்...!

"சினா கானா"வுக்கு ஜோடியாகும் நயன்...!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடிக்கவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

தமிழில் வெற்றிப்பட நாயகியாக வலம் வருபவர் நயன் தாரா. கடந்தாண்டு அவரது தனி ஒருவன், மாயா, நானும் ரவுடி தான் பட தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து, அவர் தனது சம்பளத்தை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனாலும், நயன்தாராவே தான் வேண்டும் என அவரது வீட்டு வாசலில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் தவம் கிடக்கின்றனர்.

இது நம்ம ஆளு...

இது நம்ம ஆளு...

இந்நிலையில், சிம்பு ஜோடியாக நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு விரைவில் ரிலீசாக உள்ளது. இப்படத்தை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சுந்தர்.சி இயக்கத்தில்...

சுந்தர்.சி இயக்கத்தில்...

இதுதவிர அரண்மனை 2 படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி இயக்க இருக்கும் புதுப்படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திக்கேயன் ஜோடியாக...

சிவகார்த்திக்கேயன் ஜோடியாக...

இப்படம் மட்டுமின்றி நானும் ரவுடி தான் படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் புதுப்படத்தில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறாராம்

ரஜினி முருகன்...

ரஜினி முருகன்...

ரஜினி முருகன் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக ஜெயம் ராஜா மற்றும் விக்னேஷ் சிவன் படங்களில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திக்கேயன்.

ராஜாவுக்கு மறுப்பு...

ராஜாவுக்கு மறுப்பு...

இதில் முதலில் ராஜாவின் படத்தில் நடிப்பதற்குத் தான் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், ஆனால் அதில் நடிப்பதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

காதல்...

காதல்...

நானும் ரவுடி தான் படப்பிடிப்பின் போது விக்னேஷ்சிவனுக்கும், நயன்தாராவிற்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களும் அதை உறுதி செய்வது போலவே அமைந்து வருகின்றன.

சம்மதம்...

சம்மதம்...

இந்நிலையில், விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதிற்கிணங்க, அவரது இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க சம்மதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

English summary
Director Vignesh Shivan’s new film will have Sivakarthikeyan and Nayanthara pairing up for the first time and the official announcement will follow soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil