»   »  ஓட்டாதீங்கயா, மீம்ஸ் போதும்: சூர்யா ரசிகர்களிடம் கெஞ்சிய விக்னேஷ் சிவன்

ஓட்டாதீங்கயா, மீம்ஸ் போதும்: சூர்யா ரசிகர்களிடம் கெஞ்சிய விக்னேஷ் சிவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களில் வெளியிடப்படும் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்வீட்டியுள்ளார்.

சிங்கம் 3 படத்தை அடுத்து சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.


சூர்யாவை இயக்கும் வாய்ப்பு விக்கிக்கு கிடைக்க நயன்தாரா காரணம் என்று கூறப்படுகிறது.


விக்கி

விக்கி

தானா சேர்ந்த கூட்டம் படப்பிடிப்பு துவங்கி இத்தனை நாட்களாகியும் ஒரு தகவலும் வெளியிடவில்லை விக்னேஷ் சிவன். ஷூட்டிங் நடக்கிறது சூர்யா ரசிகர்களுக்கே அவ்வளவு தான் தெரியும்.


கடுப்பு

கடுப்பு

படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் அல்லது டீஸரை வெளியிடுமாறு சூர்யா ரசிகர்கள் விக்னேஷ் சிவன் கொஞ்சி, கெஞ்சிப் பார்த்துவிட்டனர். ஒன்னும் நடக்கவில்லை. இதையடுத்து விக்கியை கலாய்த்து மீம்ஸ் போடத் துவங்கினர்.


பாகுபலி 2

பாகுபலி 2

பாகுபலி 2 படத்தை பார்த்துவிட்டு பெரிய ட்வீட் போட்டார் விக்னேஷ் சிவன். இந்த ட்வீட் போட எல்லாம் நேரம் இருக்கு தானா சேர்ந்த கூட்டம் பற்றி பேச மட்டும் நேரம் இல்லையோ என்று சூர்யா ரசிகர்கள் விக்கியை வறுத்தெடுத்தனர்.


ஃபர்ஸ்ட் லுக்

சூர்யாவின் புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் சில நாட்களில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதாக தெரிவித்துள்ளார். மேலும் மீம்ஸ் போதும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.


English summary
Director Vignesh Shivan tweeted that,' SurpriseSundayPic for the #SuperFans of Suriya_offl sir 😇❤️#ThaanaaSerndhaKoottam #FirstLookSurprise innum sila naatkalil👍Memes podhum🙏🏻😢'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil