டூ டூட்டூ டூ டூட்டூ...காத்து வாக்குல ஒரே ட்வீட்டில் ரெண்டு அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன்

சென்னை : காத்து வாக்குல ரெண்டு காதல் படம் பற்றி ஒரே ட்வீட்டில் இரண்டு செம சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளார் டைரக்டர் விக்னேஷ் சிவன். அவரின் இந்த வித்தியாசமான ட்வீட் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, பிரபு நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரொமான்டிக் காமெடி படமாக தயாராகி உள்ளது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் - நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

 தள்ளிப்போன ஷூட்டிங்

தள்ளிப்போன ஷூட்டிங்

2020 ம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார் விக்னேஷ் சிவன். முக்கோண காதல் கதையான இந்த படம் 2020 ம் ஆண்டு ஏப்ரல் மாதமே துவங்கப்படுவதாக இருந்தது. ஆனால் லாக்டவுன் காரணமாக படத்தின் வேலைகள் தள்ளிப்போயின. பிறகு அந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் ஷூட்டிங் துவங்கப்பட்டது. இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக ரெண்டு காதல் என்ற பாடல் 2021 ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான செப்டம்பர் 18-ம் தேதி செகண்ட் சிங்கிளாக டூ டூட்டூ டூ ட்டூ என்ற பாடல் வெளியிடப்பட்டது செம ஹிட் ஆனது. சமீபத்தில் நான் பிழை பாடல் மூன்றாவது சிங்கிளாக வெளியிடப்பட்டது.

காதலர் தின ரிலீசா

காதலர் தின ரிலீசா

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டப்பிங் உள்ளிட்ட வேலைகள் சமீபத்தில் நடந்ததை போட்டோவுடன் வெளியிட்டார் விக்னேஷ் சிவன். இதனால் படத்தை 2022 ஆம் ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி மாதம் வெளியிடுவார்கள் என கூறப்பட்டது. சிவகார்த்திகேயனின் டான் மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்கள் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் என கூறப்பட்டது. ஆனால் டான் படம் மார்ச் 25-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இணையத்தை கலக்கும் டூ டூட்டூ டூட்டூ

இணையத்தை கலக்கும் டூ டூட்டூ டூட்டூ

இதற்கிடையில் 2022 ஆம் ஆண்டின் ஸ்பெஷல் தேதியான 02.02.2022 இன்று என்பதால் அனிருத் இசையில் உருவான டூ டூட்டூ டூ டூட்டூ என்ற பாடல் ட்விட்டரில் செம டிரெண்டாகி உள்ளது. இந்நிலையில் இதையே தானும் குறிப்பிட்டு காத்து வாக்குல ரெண்டு காதல் படம் பற்றிய இரண்டு அப்டேட்களை ஒரே ட்வீட்டில் வெளியிட்டுள்ளார் டைரக்டர் விக்னேஷ் சிவன்.

ரெண்டு அப்டேட் கொடுத்த விக்கி

ரெண்டு அப்டேட் கொடுத்த விக்கி

அவர் தனது ட்வீட்டில், 2.2.2022 அன்று 2.22 மணிக்கு வெளியிடப்படும் தகவல் என்னவென்றால் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் 11.2.2022 அன்று வெளியிடப்படும். படத்தின் ரிலீஸ் ஏப்ரல் மாதத்தில் தியேட்டர்களில் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார். அதோடு விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இருக்கும் படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட் அனைவரையும் கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X