நாளை காத்துவாக்குல ரெண்டு காதல் அடுத்த அப்டேட்...சூப்பர் தகவலை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

சென்னை : காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் அடுத்த அப்டேட் ஒன்றை நாளை வெளியிட உள்ளதாக டைரக்டர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். ரொமான்டிக் காமெடி படமான இந்த படத்தை விக்னேஷ் சிவன் எழுதி, இயக்கி உள்ளார். இந்த படத்தை ரெளடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளன. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இவர் நடிக்க வேண்டிய படமா

இவர் நடிக்க வேண்டிய படமா

நானும் ரெளடி தான் படம் வெற்றி பெற்றதுமே, சிவகார்த்திகேயன், நயன்தாரா, த்ரிஷாவை வைத்து முக்கோண காதல் கதையை இயக்க விக்னேஷ் சிவன் திட்டமிட்டு, அதற்கான கதையையும் தயார் செய்து விட்டாராம். பிறகு சிவகார்த்திகேயனுக்கு பதில் விஜய் சேதுபதியை ஹீரோவாக முடிவு செய்து, படத்தின் டைட்டிலையும் அறிவித்தனர். பிறகு த்ரிஷாவிற்கு பதில் சமந்தா மாற்றப்பட்டார்.

காதலர் தின வெளியீடு

காதலர் தின வெளியீடு

2020 ல் துவங்கப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங், கொரோனா லாக்டவுனால் தாமதமானது. முதலில் 2021 ம் ஆண்டு கிறிஸ்துமஸ் அன்று படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தாமதமானதால் தற்போது படத்தை 2022 ம் ஆண்டு காதலர் தினமான பிப்ரவரி 14 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இளைஞயர்களை கவர்ந்த டூ டூ டூ

இளைஞயர்களை கவர்ந்த டூ டூ டூ

இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான ரெண்டு காதல் பாடல் கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து செகண்ட் சிங்கிளான டூ டூ டூ பாடல், விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான செப்டம்பர் 18 ம் தேதியன்று வெளியிடப்பட்டது. அனிருத் இசையமைத்து, தானே பாடி ஆடிய இந்த பாடல் அனைவரிடமும் பாராட்டை பெற்றதுடன், ரசிகர்களையும் பெரிதும் கவர்ந்தது.

நாளை அடுத்த அப்டேட்

நாளை அடுத்த அப்டேட்

இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான நான் பிழை என பாடல் ஜனவரி 3 ம் தேதியான நாளை வெளியிடப்படும் என விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். இந்த பாடல் ரிலீசை முன்னிட்டு விஜய் சேதுபதி, நயன்தாரா இருக்கும் புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் எப்படி இருக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Recommended Video

Prabhu Sir மறுபடியும் முதல்ல இருந்து Shoot பண்ணுவோம் | Vignesh Shivan, KVRK, Nayanthara
விரைவில் டீசர், டிரைலர்

விரைவில் டீசர், டிரைலர்

படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதால் விரைவில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர், டிரைலர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X