மாமனார் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்...முதல் கமெண்ட் யாரோடது தெரியுமா?
சென்னை : நயன்தாராவின் அப்பாவின் பிறந்தநாளுக்கு டைரக்டர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ள வாழ்த்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதிலும் விக்னேஷ் சிவனின் பதிவிற்கு முதல் ஆளாக பிரபலம் ஒருவர் கமெண்ட் போட்டது தான் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
கோலிவுட்டின் பிரபலமான காதல் ஜோடியாக வலம் வருகிறார்கள் நயன்தாராவும் - விக்னேஷ் சிவனும். எப்போ கல்யாணம் என பல வருடங்களாக இவர்களிடம் கேட்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை அதற்கு மட்டும் பதில் சொல்லாமல் மெளனம் காத்து வருகிறார்கள். ஆனால் ஏற்கனவே தங்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நயன்தாரா கூறி உள்ளார்.

நயன்தாரா திருமணம் எப்போ
இந்த ஆண்டு இறுதிக்குள் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தற்போது தான் ஒப்புக் கொண்ட படங்களை நயன்தாரா நடித்து முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஏப்ரல் 28 ம் தேதி ரிலீசாக உள்ளது. அடுத்து ஷாருக்கான் - அட்லீ படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா.

கோவிலில் சாமி தரிசனம்
இதற்கிடையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அடிக்கடி கோவில்கள் பலவற்றிற்கும் சென்று சாமி தரிசனம் செய்யும் போட்டோக்கள், வெளியில் ஷாப்பிங் செல்லும் போட்டோக்களும் வெளியாகி செம வைரலாகின்றன. நேற்று கூட இருவரும் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று வந்த போட்டோக்கள் வெளியாகின.

மாமனாருக்கு பிறந்தநாள் வாழ்த்து
நயன்தாரா மலையாள கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கோவில், குருத்வாரா போன்ற இடங்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் அப்பா குரியனின் பிறந்தநாளை நேற்று குடும்பமாக சேர்ந்து கொண்டாடி உள்ளனர். மாமனாரின் பிறந்தநாளுக்காக இன்ஸ்டாகிராமில் வாழ்த்து பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், நீங்கள் சிரிப்பது, நீங்கள் சாப்பிடுவது, நீங்கள் பார்ப்பது, நீங்கள் எங்களுடன் இருப்பதே மகிழ்ச்சி. அதுவே எங்களின் வாழ்க்கையை அழகாக்குகிறது. நீங்கள் எப்போதும் எங்களுடன் இருக்க இறைவன் உங்களுக்கு எல்லா பலத்தையும், ஆற்றலையும் கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். நீங்கள் தான் எங்களின் ஆசீர்வாதம் என குறிப்பிட்டுள்ளார்.

முதல் ஆளாக கமெண்ட் போட்டவர்
விக்னேஷ் சிவன் இந்த பதிவை போட்டதுமே முதல் ஆளாக வந்து, Awww என கமெண்ட் செய்துள்ளார் நடிகை சமந்தா. அவரைத் தொடர்ந்து நடிகை அமலாபாலும் ஹார்ட் எமோஜிக்கள் போட்டு கமெண்ட் செய்துள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவிற்கும், பிரபல நடிகைகளின் கமெண்ட்களும் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றன. ரசிகர்கள் பலரும் நயன்தாராவின் அப்பாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ப்ரோ...அவர் உங்கள முறைக்கிறார்
இன்னும் சிலர், என்ன ப்ரோ நீங்கள் சொன்னதற்கும் அவர் பார்ப்பதற்கும் சம்பந்தமே இல்லை. நீங்கள் சிரிப்பதாக போட்டுள்ளீர்கள். ஆனால் அவர் உங்களை முறைக்கிறார் ப்ரோ. அவர் ஸ்மைல் பண்ற மாதிரி தெரியலியே. விக்னேஷ் சிவனின் கேப்ஷனுக்கு நயன்தாராவின் அப்பா கொடுத்துள்ள ரியாக்ஷன் தான் செமையாக உள்ளது என கிண்டலாக கமெண்ட் பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











