»   »  விக்னேஷ் சிவனின் அடுத்த படம்... அனிருத் தான் இசையமைப்பாளர்!

விக்னேஷ் சிவனின் அடுத்த படம்... அனிருத் தான் இசையமைப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
ஸ்கிரிப்ட் ரெடி சிவகர்த்திகேயனை இயக்கவிருக்கும் விக்னேஷ் சிவன்..!!

சென்னை : 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப் பிறகு விக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார் என கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் அனிருத் ஆகியோர் மியாமியில் ஒரு வாரம் தங்கியிருந்து டிஸ்கஷனில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்மூலம், விக்னேஷ் சிவனின் அடுத்த படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் எனத் தெரிகிறது.

தானா சேர்ந்த கூட்டம்

தானா சேர்ந்த கூட்டம்

'தானா சேர்ந்த கூட்டம்' எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் தோல்வியைச் சந்திக்கவில்லை என்று கோலிவுட் வட்டாரங்களில் சொல்கிறார்கள். சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்' பெரிய வெற்றியைப் பெறாதது ரசிகர்களுக்கும் கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிஸ்கஷனில் விக்னேஷ் சிவன்

டிஸ்கஷனில் விக்னேஷ் சிவன்

'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்காக கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன், தற்போது அவரது நண்பரும் இசையமைப்பாளருமான அனிருத்துடன் அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற கடற்கரை நகரமான மியாமி நகரத்தில் டிஸ்கஷன் செய்து வருகிறார்.

விக்னேஷ் சிவன் ட்வீட்

இது பற்றிய தகவலை விக்னேஷ் சிவன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். "மியாமியில் ஒரு வாரமாக இருக்கிறோம். என்னுடைய பலத்திற்குத் தூணாக இருக்கும் அனிருத்துடன் மற்றொரு பயணத்திற்காகக் காத்திருக்கிறேன்.

அனிருத்துடன் மற்றொரு பயணம்

அனிருத்துடன் மற்றொரு பயணம்

அடுத்த படத்திற்கான புதிதான விஷயத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். சுவாரசியமான தகவல்களை விரைவில் தெரிவிக்கிறேன்," எனக் கூறியுள்ளார் விக்னேஷ் சிவன். அனிருத்துடன் மற்றொரு பயணம் எனக் கூறியிருப்பதன் மூலம் அடுத்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் என்பது உறுதியாகி இருக்கிறது.

English summary
Vignesh Shivan and Anirudh have been staying in Miami for a week. It is confirmed that Anirudh is the music director of Vignesh shivan's next film. The announcement of Vignesh shivan's next film seems to be coming soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil