»   »  காதலி நயன்தாராவுக்காக சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்

காதலி நயன்தாராவுக்காக சென்சார் போர்டை விமர்சித்த விக்னேஷ் சிவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன்தாராவின் டோரா படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ள சென்சார் போர்டை விமர்சித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

தாஸ் ராமசாமி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ஹாரர் படமான டோரா வரும் 31ம் தேதி ரிலீஸாகிறது. படத்தில் ஹரிஷ் உத்தமன், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் படத்திற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

டோரா

டோரா

படத்தில் பயப்படும் வகையான காட்சிகள் அதிக அளவில் இருப்பதால் இது குழந்தைகளுக்கு ஏற்ற படம் இல்லை என்று கூறி டோராவுக்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

விக்கி

விக்கி

டோராவுக்கு ஏ சான்றிதழ் வழங்கிய சென்சார் போர்டை இயக்குனர் விக்னேஷ் சிவன் ட்விட்டரில் விமர்சித்துள்ளார். தனது காதலியின் படத்திற்கு ஏ சான்றிதழ் கிடைத்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

சென்சார் போர்டு

சென்சார் போர்டு

சென்சார் போர்டை விமர்சித்து விக்கி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

டோரா - ஏ சான்றிதழ்

டோரா - ஏ சான்றிதழ்

மாநகரம் - யு/ஏ

டி16 - யு/ஏ

ஆனால் அண்மையில் சில படங்களுக்கு யு அளிக்கப்பட்டுள்ளது. நம் சென்சார் போர்ட் மீதான பிரியம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது என தெரிவித்துள்ளார்.

சூர்யா

சூர்யா

விக்னேஷ் சிவன் தற்போது சூர்யா, கீர்த்தி சுரேஷை வைத்து தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Vignesh Shivan has taken a dig at censor board for giving A certificate to his girlfriend Nayanthara's horror flick Dora.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil