என்ன சொல்றீங்க...ஏகே 62 படத்திற்கு முன் விக்னேஷ் சிவன் இதை இயக்க போகிறாரா ?

சென்னை : கோலிவுட்டின் டாப் டைரக்டர்களில் விக்னேஷ் சிவனும் ஒருவர். நானும் ரெளடி தான் படத்திற்கு பிறகு இவரின் வளர்ச்சி எங்கேயோ போய் விட்டது. அதிலும் நயன்தாராவின் காதலராகி விட்டதால் இவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் கவனம் ஈர்த்து வருகிறது.

சமீபத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி இருந்தார் விக்கி. இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் ஓரளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இந்த படம் ரிலீசாவதற்கு முன்பே, அஜித்தின் அடுத்த படமான ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க போகிறார் என லைகா நிறுவனம் அறிவித்தது. இதனால் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விக்கி எப்படி இயக்க உள்ளார் என பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.

பீதியில் அஜித் ரசிகர்கள்

பீதியில் அஜித் ரசிகர்கள்

ஆனால் காத்துவாக்குல ரெண்டு காதல் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்காததால் ஏகே 62 பற்றி கொஞ்சம் பீதியில் தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அஜித் படம் என்பதால் விக்கி ஸ்பெஷல் எஃபர்ட் போடுவார், படம் வேற லெவலில் இருக்கும் என அதிகம் நம்பிக்கையுடன் உள்ளனர். ஏகே 61 தீபாவளி ரிலீஸ், ஏகே 62 அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீஸ் என்றும் சொல்லப்பட்டது.

தீயாய் பரவிய ஏகே 62 தகவல்கள்

தீயாய் பரவிய ஏகே 62 தகவல்கள்

அஜித் தற்போது நடித்து வரும் ஏகே 61 படத்தின் வேலைகள் ஜுன் - ஜுலை மாதங்களில் முடிந்துவிடும். அதற்கு பிறகு ஏகே 62 வேலைகளில் அஜித் இறங்க உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. இதே போல் விக்கியும் ஜுன் மாதத்திற்கு பிறகு ஏகே 62 வேலைகளை துவக்குவார். இது கிராமத்து கதை, அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க போகிறார் என சொல்லப்பட்டது. இதில் ஹீரோயின் ரோலில் நடிக்க நயன்தாராவிடம் பேசப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

ஏகே 62 க்கு முன் இன்னொரு படமா

ஏகே 62 க்கு முன் இன்னொரு படமா

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை முடித்த பிறகு நயன்தாராவை திருமணம் செய்து கொண்ட விக்கி, ஏகே 62 படத்திற்காக ஹனிமுன் செல்லாமல் பணியாற்றி போகிறார் என்றார்கள். ஆனால் கல்யாணம் முடிந்த கையோடு ஹனிமுன் கிளம்பி சென்று விட்டார். இனி ஏகே 62 அப்டேட்கள் வரும் என பார்த்தால், ஏகே 62 வேலைகளை துவங்குவதற்கு முன் மற்றொரு படத்தை விக்கி இயக்க போகிறாராம்.

இதை இவர் தான் செய்ய போகிறாரா

இதை இவர் தான் செய்ய போகிறாரா

ஏகே 61 ஷுட்டிங் முடிக்கவே செப்டம்பர் ஆகி விடும், டிசம்பர் - ஜனவரியில் தான் ஏகே 61 ரிலீஸ் என சொல்லப்படுவதால் ஏகே 62 வேலைகளை துவங்குவதற்கு முன், வேறு ப்ராஜக்டிற்கு விக்கி ஓகே சொல்லி விட்டாராம். அதாவது, சென்னையில் நடக்கும் 44வது செஸ் ஒலிம்பியாடு நிகழ்ச்சியின் துவக்க விழாவை தான் விக்கி தற்போது இயக்க போகிறாராம்.

நயன்தாரா வருவாரா இதை பார்க்க?

நயன்தாரா வருவாரா இதை பார்க்க?

44வது செஸ் ஒலிம்பியாடு ஜுலை 28 ம் தேதி துவங்கிய ஆகஸ்ட் 10 ம் தேதி வரை மகாபலிபுரத்தில் நடக்க உள்ளது. இதன் துவக்க விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் இரண்டு முன்னணி இசையமைப்பாளர்களின் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை தான் விக்கி படமாக இயக்க உள்ளார். விக்கி இயக்க போகிறார் என்பதால் துவக்க விழாவில் அவரது மனைவி நயன்தாராவும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X