»   »  கீர்த்தி சுரேஷை கலாய்த்த விக்கி... அன்பான ஃபேன்ஸுக்கு ஒரு அறிவிப்பு!

கீர்த்தி சுரேஷை கலாய்த்த விக்கி... அன்பான ஃபேன்ஸுக்கு ஒரு அறிவிப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
கீர்த்தி சுரேஷை கலாய்த்த விக்னேஷ் சிவன்- வீடியோ

சென்னை : சூர்யா, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.

இந்த சந்திப்பில், படக்குழுவினர், நடிகர், நடிகைகள் கலந்துகொண்டு பேசினர்.

இந்தச் சந்திப்பில் 'தானா சேர்ந்த கூட்டம் படம் பற்றிப் பேசிய விக்னேஷ் சிவன் நடிகை கீர்த்தி சுரேஷை கலாய்த்தார்.

ஸ்பெஷல் 26 ரீமேக் இல்லை

ஸ்பெஷல் 26 ரீமேக் இல்லை

"எங்களுக்கு இந்தப் படத்தின் கதையை ஃப்ரெஷ்ஷா உருவாக்க போதிய நேரம் இல்லை. அதனால் 'ஸ்பெஷல் 26' படத்தோட கதைக்களத்தை எடுத்துக்கிட்டு அதிலிருந்து வொர்க் பண்ணினோம். 'ஸ்பெஷல் 26' படம் 1980-களில் நடந்த உண்மைச் சம்பவம் தான். அதை என் பாணியில் படமாக்கியிருக்கேன். படம் பார்க்கும்போது 'ஸ்பெஷல் 26' சாயல் இருக்காது.

கமல்ஹாசன் மாதிரி

கமல்ஹாசன் மாதிரி

முக்கிய கதாபாத்திரத்துக்கு நடிக்கிறதுக்காக ரம்யா கிருஷ்ணனை அப்ரோச் பண்ணினோம். அவங்க அக்செப்ட் பண்ணினதுக்கு நன்றி. உண்மைய சொல்லணும்னா நடிகர்களில் கமல்ஹாசன் எப்படியோ அப்படி நடிகைகளில் இவங்க. ஒவ்வொரு நடிப்புக்கும் வித்தியாசம் காட்டி அசத்துவாங்க.

கீர்த்தியை கலாய்த்த விக்கி

கீர்த்தியை கலாய்த்த விக்கி

கீர்த்தி சுரேஷ் இப்போவே, பிரதர் பிரதர்னு பத்து தடவைக்கு மேல அழுத்திட்டாங்க. ரொம்ப பயப்படுறாங்க போல.. அதனால், சிஸ்டர் அவர்களே... நீங்க சேஃபான இடத்துல தான் இருக்கீங்க. இப்போ டாப் படங்களில் எல்லாத்துலேயும் இவங்கதான் நடிக்கிறாங்க.

ஆர்.ஜே.பாலாஜிக்கு அறிமுகம்

ஆர்.ஜே.பாலாஜிக்கு அறிமுகம்

ஆர்.ஜே.பாலாஜியை சொல்ல மறந்துட்டேன். இப்போ நான் சொல்லலனா அவன் என்னை ஏதாவது பண்ணிடுவான். இது ரொம்ப ரொம்ப குட்டி ரோல். அதை அவன் பண்ணமாட்டான்னு தான் நினைச்சேன். சொன்னதும் பண்ண ஒத்துக்கிட்டான். அவன் நடிச்சு நான் பார்த்தது இல்ல. இது தான் அவனுக்கு அறிமுகப் படம்.

அன்பான ஃபேன்ஸ்

அன்பான ஃபேன்ஸ்

அன்பான ஃபேன்ஸ் பட்டாளம் இருக்காங்க. ஒவ்வொரு நாளும் ஏதாவது அப்டேட் கேட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு பயந்தே பாடல்களையெல்லாம் உடனுக்குடன் ரிலீஸ் பண்ணினோம். இந்த அன்பான ஃபேன்ஸின் ஆதரவு படத்தின் ரிலீஸுக்கு அப்புறம் எப்படி இருக்கும்னு பார்க்க வெய்ட் பண்றேன்.

English summary
Suriya, Keerthi Suresh starred 'Thaana Serndha koottam' press meet was held yesterday evening. Vignesh shivan Speaking about the film, trolls actress Kirti Suresh. 'I have not seen RJ Balaji's acting. This is the debut for him. ' said Vignesh shivan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X