கண்மணி அன்போடு காதலன்... நயன் டப்பிங் பேசியது பார்த்து உருகிய விக்னேஷ் சிவன்

சென்னை : டைரக்டர், தயாரிப்பாளர் என்பதை கடந்து, பாடலாசிரியராகவும் அனைவரின் மனங்களையும் கவர்ந்து வெற்றி பெற்றுள்ளார் விக்னேஷ் சிவன். அதிகம் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் வலிமை படத்திற்கான பாடல் வரிகளை விக்னேஷ் சிவன் தான் எழுதி உள்ளார்.

அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் முதல் சிங்கிளாக வெளியிடப்பட்டுள்ள நாங்க வேற மாரி பாடலை விக்னேஷ் சிவன் தான் எழுதி இருந்தார். இந்த பாடல் வேற லெவல் ஹிட்டாகி உள்ளது. இதைத் தொடர்ந்து வலிமை படத்தின் செகண்ட் சிங்கிள் டிசம்பர் 5 ம் தேதி வெளியிடப்பட உள்ளது.

வலிமை சென்டிமென்ட் பாடல்

வலிமை சென்டிமென்ட் பாடல்

வலிமை செகண்ட் சிங்கிள் ப்ரோமோ நேற்று மாலை வெளியிடப்பட்டது. அம்மா சென்டிமென்ட் பாடலான இந்த பாடலையும் விக்னேஷ் சிவன் தான் எழுதி உள்ளார். நான் பார்த்த முதல் முகம் நீ... நான் கேட்ட முதல் குரல் நீ என்ற இந்த பாடல் வெளியாவதற்கு முன்பே அனைவரின் ஆர்வத்தையும் தூண்டி உள்ளது.

காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல்

சமீபத்தில் தான் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி முடித்துள்ளார் விக்னேஷ் சிவன். முக்கோண காதல் கதையான இந்த படம் 2022 ம் ஆண்டு காதல் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

டப்பிங் பேசும் நயன்தாரா

டப்பிங் பேசும் நயன்தாரா

பாடல்கள் மட்டுமல்ல தனது காதலி நயன்தாராவை நினைத்து உருகி, விக்னேஷ் சிவன் அடிக்கடி போடும் ட்வீட்களும் செம பிரபலம். அந்த வரிசையில் லேட்டஸ்டாக விக்னேஷ் சிவன் போட்டுள்ள ட்வீட்டும் வைரலாகி வருகிறது. காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நயன்தாரா தற்போது டப்பிங் பேசி வருகிறார்.

கண்மணி அன்போடு காதலன்

கண்மணி அன்போடு காதலன்

இதை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ள விக்னேஷ் சிவன், கண்மணி அன்போடு காதல் நான் எழுதிய டயலாக்குகள் நீயே டப் பண்றது மிகுந்த சந்தோஷம். காத்து வாக்குல ஆரம்பமானது காத்து வாக்குல ரெண்டு காதல் டப்பிங் என குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட்டுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

டிரெண்டிங்கான ஹாஷ்டேக்

டிரெண்டிங்கான ஹாஷ்டேக்

விக்னேஷ் சிவனின் இந்த ட்வீட்டை அடுத்து ட்விட்டரில் காத்து வாக்குல ரெண்டு காதல் என் ஹாஷ்டேக் டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இதில் பலர், படத்தோட ஸ்டில்ஸ் எப்போ வெளியிடுவீங்க, அடுத்த படமான ஊர்க்குருவி படத்தின் அப்டேட் எப்போ வரும். இப்போ தான் டப்பிங் பணிகள் போய் கொண்டிருக்கிறது. அதற்கு இந்த படம் தீபாவளி ரிலீஸ், கிறிஸ்துமஸ் ரிலீஸ், பொங்கல் ரிலீஸ் என செய்தி வந்து கொண்டே இருக்கு என கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X