‘டியூட்‘ வெற்றியில் குளிர் காய்ந்த LIK.. மிகப்பெரிய தொகைக்கு விற்பனையான டிஜிட்டல் ரைட்ஸ்!

சென்னை: அறிமுக இயக்கின கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் ரோகினி நடித்த டியூட் திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 17ந் தேதி திரையரங்கில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. படம் வெளியான ஒரே வாரத்தில் நூறு கோடியை வசூலித்து, 100 கோடி கிளப்பில் டியூட் திரைப்படம் இணைந்துள்ளது. டியூட் திரைப்படத்தோடு, விக்னேஷ் சிவன் இயக்கிய எல்.ஐ.கே திரைப்படமும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டியூட் திரைப்படம் வெளியானதால்,எல்.ஐ.கே திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு படம் அடுத்த மாதம் 18ந் தேதி வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது.

L I K Vignesh Shivan pradeep ranganathan
Photo Credit:

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி, சீமான் மற்றும் எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள எல்ஐகே படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் டீசர் பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாள் அன்று வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் விற்காமல் இருப்பதாக தகவல் வெளியானது.

டிஜிட்டல் ரைட்ஸ்: ஆனால், தற்போது பிரதீப் ரங்கநாதன் நடித்த டியூட் படம் தியேட்டரில் வெளியாகி ரூ 100 கோடிக்கும் மேல் வசூலை அள்ளி இருக்கும் நிலையில், LIK திரைப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ் மிகப்பெரிய தொகைக்கு விற்கப்பட்டு இருப்பதாக தகவல் வந்துள்ளது. அண்மையில், எல்.ஐ.கே. திரைப்படத்தை அமேசான் நிறுவனம் படத்தை பார்த்துவிட்டு, படம் நன்றாக இருப்பதாக தெரிவித்து மிகப்பெரிய தொலைக்கு படத்தை வாங்கி உள்ளனர். அவர்களுக்கு படம் மிகவும் பிடித்துவிட்டதாம். இதையடுத்து, டிஜிட்டல் ரைட்ஸை அமேசான் நிறுவனம் கையெழுத்திட்டு வாங்கி விட்டதாக சொல்லப்படுகின்றது. 'டியூட்' திரைப்படத்தின் வெற்றியால், LIK. திரைப்படத்திற்கு ஜாக்பாரட் அடித்துள்ளது. பிரதீப் ரங்கநாதனின் முந்தய படங்களைப் போலவே இத் LIK திரைப்படமும் நூறு கோடி வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X