»   »  'லவ் யூ தங்கமே..!' - நயனுக்கு ஸ்பெஷலாக வாழ்த்துச் சொன்ன விக்னேஷ் சிவன்!

'லவ் யூ தங்கமே..!' - நயனுக்கு ஸ்பெஷலாக வாழ்த்துச் சொன்ன விக்னேஷ் சிவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : சூப்பரான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. #HBDLadySuperstarNayanthara எனும் ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

நயன்தாராவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர். அவர் நடித்த படங்களில் தங்களுக்குப் பிடித்தவற்றை நினைவுகூர்ந்து ட்விட்டரில் வாழ்த்தி வருகின்றனர் நயன்தாரா ரசிகர்கள்.

Vignesh shivan wished nayanthara

இந்நிலையில் நயன்தாராவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனும் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ப்ரொஃபைல் பிக்சராகவும் வைத்துள்ளார்.

விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பதிவில், 'நான் பார்த்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். எப்போதும் தைரியமாகவும், அழகாகவும் இரு. நயன்தாரா என்றால் யார் என்று சொல்லும் வகையிலான படங்களைக் கொடு... உன்னை நினைத்து எப்போதும் பெருமையாக உள்ளது. உன் மீது அதிக அன்பும், மரியாதையும் உள்ளது என் தங்கமே..!' என்று புகழ்ந்திருக்கிறார்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் நீண்டகாலமாக காதலித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதை இருவரும் வெளிப்படையாக இன்னும் சொல்லாமல் இருக்கிறார்கள். சமீபத்தில் விக்னேஷ் சிவன் பிறந்தநாளின்போது, அமெரிக்காவில் போய் இருவரும் கொண்டாடி விட்ந்த் திரும்பியது குறிப்பிடத்தக்கது. இப்போது, காதலோடு வாழ்த்துச் சொல்லி இருக்கிறார் விக்கி.

English summary
Director Vignesh shivan wished nayanthara for her birthday on twitter. He updated his profile picture along with nayanthara. He quoted as 'Loads of love and respect to you my Thangameyyy'.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil