»   »  போப் ஆசியுடன் விக்டர் ஆன விக்னேஷ் சிவன்.. முடிவுக்கு வருகிறது 'நயன்தாராவின் காதல்கள்!'

போப் ஆசியுடன் விக்டர் ஆன விக்னேஷ் சிவன்.. முடிவுக்கு வருகிறது 'நயன்தாராவின் காதல்கள்!'

Posted By:
Subscribe to Oneindia Tamil

வருகிற செய்திகளைப் பார்த்தால், சிந்துபாத் தொடர் மாதிரி தொடர்ந்து கொண்டிருந்த நயன்தாராவின் காதல்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடும் போலத் தெரிகிறது.

நானும் ரவுடிதான் படத்தில் தன்னை நாயகியாகப் போட்டு இயக்கிய விக்னேஷ் சிவனுடன் அவர் செட்டிலாகிவிடுவார் என்பதுதான் கோடம்பாக்க 'பேச்சாக' இருக்கிறது.

இருவரின் காதலும் கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இப்போது அடுத்த கட்டமாக திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

Vignesh Sivan converted Christian for Nayanthara

நயன்தாரா பிரபு தேவாவைக் காதலித்தபோது, அவரைத் திருமணம் செய்து கொள்ள வசதியாக கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்துக்கு மாறினார். ஆனால் அந்த காதல் உடைந்துவிட்டது. எனவே மீண்டும் தாய் மதத்துக்குத் திரும்பினார்.

சமீபத்தில் ரோம் நகருக்குப் போய் போப் ஆண்டவரின் ஆசியையும் பெற்றார். அப்போது நயன்தாராவுடன் விக்னேஷ் சிவனும் சென்றிருந்தாராம். ரோமிலேயே அவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி விட்டதாகக் கூறுகிறார்கள்.

இப்போது விக்னேஷ் சிவன் பெயர் என்ன தெரியுமா? விக்டர்!

English summary
Nayanthara's present Boy friend Vignesh Siva has converted to Christianity and changed his name as Victor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil