»   »  தைரியமா போ தலைவா.. "ரவுடி"யை அல்லாருக்கும் பிடிக்கும்.. அன்னிக்கே அடிச்சுச் சொன்ன அனிருத்!

தைரியமா போ தலைவா.. "ரவுடி"யை அல்லாருக்கும் பிடிக்கும்.. அன்னிக்கே அடிச்சுச் சொன்ன அனிருத்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதியின் நானும் ரவுடி தான் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மக்களின் பேராதரவினால் வசூலையும் குவித்து வருகிறது. ஆனால், இப்படத்தை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்ற பயம் ஆரம்பத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு இருந்ததாம்.

தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா இதுவரை ஏற்காத வித்தியாசமான பாத்திரத்தில், நடிப்பில் தனித்து ஜொலிக்கிறார்.


ஆரம்பம் முதல் கடைசி வரை ரசிகர்களை நகைச்சுவையால் கட்டிப் போடும் மாயத்தை இப்படத்தில் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.


பயம்...

பயம்...

ஒவ்வொரு வரும் பல முறை இப்படத்தைப் பார்த்து வருவதாக டிவிட்டர் பக்கத்தில் விக்னேஷிடம் கூறி வருகின்றனர். ஆனால், படம் ரிலீசாவதற்கு முன்னர் இப்படத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என மிகவும் பயந்தாராம் விக்னேஷ்.


முதல்பட தோல்வி...

முதல்பட தோல்வி...

ஏனெனில் அவரது முதல்படம் போடா போடி சொல்லிக் கொள்வது போல் அவ்வளவாக ஓடவில்லை. எனவே இரண்டாம் படமாவது வெற்றி பெற வேண்டுமே என்ற தவிப்பு அவருக்கு இருந்துள்ளது.


அனிருத்...

அனிருத்...

விக்னேஷின் இந்தக் கவலையை நானும் ரவுடி தான் பட பிரஸ் மீட்டில் போட்டுடைத்து விட்டார் இசையமைப்பாளர் அனிருத். அதோடு விக்னேஷின் திறமைகளையும் அவர் அப்போது வெகுவாக பாராட்டி பேசினார்.


நம்பிக்கை...

நம்பிக்கை...

நானும் ரவுடி தான் படக் கதையைக் கேட்டபோது, மிகவும் வித்தியாசமாக, பிரஷ்ஷாக உணர்ந்ததாகவும், அப்போதே இப்படம் நிச்சயம் ஜெயிக்கும் என தான் நம்பியதாகவும் அனிருத் தெரிவித்துள்ளார்.


வரவேற்பு...

வரவேற்பு...

அனிருத்தின் நம்பிக்கையை மெய்ப்பிப்பது போல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டிவிட்டர் பக்கத்தில் ரசிகர்கள் மட்டுமின்றி, பிரபலங்களும் விக்னேஷைப் பாராட்டி வருகின்றனர். இதனால் தற்போது மகிழ்ச்சி அடைந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.


தனுஷுக்கும் ஹேப்பி...

தனுஷுக்கும் ஹேப்பி...

நானும் ரவுடி தான் பட வெற்றியால் விக்னேஷ் சிவன் மட்டுமின்றி, தனுஷுக்கும் மகிழ்ச்சி தான். காரணம் இப்படம் முதல் நாளில் மட்டும் 2.16 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.


நல்ல வசூல்....

நல்ல வசூல்....

‘நானும் ரவுடிதான்' படம் நன்றாக இருக்கிறது என அனைவரும் தெரிவிப்பதால், திரையரங்கின் காட்சிகள் மற்றும் வசூல் ஆகியவை அதிமாகி இருக்கிறது. சேதுபதி படங்களில் அதிகமாக வசூல் செய்திருக்கும் படம் இது' என டிவிட்டரில் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் தனுஷ்.


ஏரியா வாரியாக...

ஏரியா வாரியாக...

சென்னை 0.31, செங்கல்பட்டு 0.54, வடக்கு மற்றும் தெற்கு ஆற்காடு 0.30, சேலம் 0.12, கோயம்புத்தூர் 0.31, திருச்சி 0.22, மதுரை 0.25, திருநெல்வேலி 0.11 என மொத்தம் 2.16 கோடி வசூல் செய்திருக்கிறது என ஏரியா வாரியாக வசூல் நிலவரத்தையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.
English summary
As the movie Naanum Rowdy thaan is running successfully in theatres, the film's director Vignesh Sivan is in happy mood.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil