»   »  ரம்யா கிருஷ்ணன் பொம்பள கமல்... ஆம்பள மனோரமா யார் தெரியுமா? - விக்னேஷ் சிவன்

ரம்யா கிருஷ்ணன் பொம்பள கமல்... ஆம்பள மனோரமா யார் தெரியுமா? - விக்னேஷ் சிவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
ரம்யா கிருஷ்ணனை கலாய்க்கும் விக்னேஷ் சிவன்- வீடியோ

ரம்யா கிருஷ்ணன் பொம்பள கமல்... தம்பி ராமய்யாதான் ஆம்பள மனோரமா என்றார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடந்தது. இதில் சூர்யா , தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், தம்பி ராமையா, சுரேஷ் மேனன், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன், கலை இயக்குநர் கிரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்

Vignesh Sivan's comment on Ramya Krishnan

நிகழ்ச்சியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் பேசுகையில், "தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தான் தானா சேர்ந்த கூட்டம் சிறப்பாக வர முக்கியமான காரணம். நான் Special 26 படத்தின் உரிமையை வாங்கி, அந்த படத்தின் முக்கியமான கருவை மட்டும் எடுத்து புதிதாக ஒரு திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கியுள்ளேன். நான் சூர்யா நடித்த 'காக்க காக்க' போன்ற படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். அந்தப் படம்தான் என்னைப் போன்ற பலரை சினிமாவை நோக்கி பயணிக்க வைத்தது. உங்களை இயக்க வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சூர்யா.

சூர்யாவுக்கு படத்தில் புதுமையான லுக்கை கொடுத்துள்ளேன். இதற்கு மேல் மற்ற விஷயங்களை நீங்கள் படத்தில் பாருங்கள்.

கீர்த்தி சுரேஷ் என்னை பிரதர் , பிரதர் என்று அழுத்தி கூறிவிட்டார். நீங்கள் பயப்பட வேண்டாம். பாதுகாப்பான ஒரு இடத்தில்தான் இருக்கிறீர்கள்.

ரம்யா கிருஷ்ணன், கமல் ஹாசனை போல் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றவர். அவர் பொம்பள கமல் எனலாம்.

ஆம்பள மனோரமா யார் தெரியுமா... அவர்தான் தம்பி ராமய்யா. அனிருத்தின் இசை படத்துக்கு மிகப்பெரிய பலம்," என்றார்.

English summary
In Thaana Sertha Koottam press meet Director Vignesh Sivan has narrated Ramya Krishnan as lady Kamal.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X