»   »  நயன்தாராவுடனான காதல்... அது பெர்சனல் என்கிறார் விக்னேஷ் சிவன்!

நயன்தாராவுடனான காதல்... அது பெர்சனல் என்கிறார் விக்னேஷ் சிவன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நயன் தாராவும், தானும் காதலிக்கிறோமா இல்லையா என்பது எங்கள் தனிப்பட்ட விஷயம் எனத் தெரிவித்துள்ளார் நானும் ரவுடிதான் பட இயக்குநர் விக்னேஷ் சிவன்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் காது கேளாத பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நயன்தாரா.

இதற்கிடையே இந்தப்பட ஷூட்டிங்கின் போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. அதனை உறுதி செய்யும் படி, இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் வெளியானது. அதன் தொடர்ச்சியாக இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள விக்னேஷ் சிவன், இது தொடர்பான கேள்விகளுக்கு மழுப்பலாக பதிலளித்துள்ளார்.

திருமணம் என்பது...

திருமணம் என்பது...

அதில், ‘பொதுவாக, திருமணம் என்பது எல்லோருடைய வாழ்க்கையிலும் ஊர்-உலகத்துக்கு தெரிந்துதான் நடக்கும். அதுபோல்தான் என் திருமணமும் எல்லோருடைய வாழ்த்துகளுடன் நடக்கும்.

உண்மை இல்லை...

உண்மை இல்லை...

எனக்கும், நயன்தாராவுக்கும் ரகசிய திருமணம் நடந்ததாக பேசப்படுவதில் உண்மை இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

அது பர்சனல்...

அது பர்சனல்...

மேலும், நயன் தாராவுடன் காதல் எனக் கூறப்படுவது குறித்த கேள்விக்கு அது தனிப்பட்ட விஷயம் என அவர் பதிலளித்துள்ளார்.

உற்றுப் பாருங்கள்...

உற்றுப் பாருங்கள்...

இருவரும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானது உண்மையான படங்கள் தானா அல்லது செட்-அப் வேலையா என்ற கேள்விக்கு, ‘அந்த படத்தை உற்றுப் பாருங்கள், தெரியும்' எனத் தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.

English summary
Nanum Rowdy than film director Vignesh sivan has opened his relationship with actress Nayanthara.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil