twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குவியும் பிரார்த்தனைகள்...ட்விட்டர் டிரெண்டிங்கில் விஜயகாந்த்

    |

    சென்னை : நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Recommended Video

    Vijayakanth நலமுடன் உள்ளார்.. விரைவில் வீடு திரும்புவார்.. DMDK அறிக்கை

    Vijakanth in twitter trending...fans pray for his speedy recovery

    அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் கேப்படனுக்கு என்னச்சு என தெரியாமல் அவரது ரசிகர்களும், கட்சி தொண்டர்களும் கவலை அடைந்துள்ளனர்.

    எங்கேயும் எப்போதும் அம்மா... அம்மா ஸ்ரீதேவியை மிஸ் செய்யும் குஷி கபூர்எங்கேயும் எப்போதும் அம்மா... அம்மா ஸ்ரீதேவியை மிஸ் செய்யும் குஷி கபூர்

    சினிமா, அரசியலை தாண்டியும் பலருக்கும் பல உதவிகளை விஜயகாந்த் செய்து வந்தார். இதனால் அவர் மீது கட்சியை தாண்டியும் நன்மதிப்பு அதிகம். விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்த போது கோலிவுட்டிற்கு பல அரசு உதவிகளை பெற்றுத் தந்துள்ளார். நலிவடைந்த கலைஞர்களுக்கு மாத ஓய்வூதியம் தர ஏற்பாடு செய்தவரும் விஜயகாந்த் தான்.

    கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, அரசியலில் ஈடுபட முடியாமல் விஜயகாந்த் இருந்து வந்ததே வேதனையான விஷயமாக இருந்தது. எப்போது கேப்டன் பழைய நிலைக்கு திரும்புவார் என்ற கேள்வியை பலரும் அடிக்கடி கேட்டு வந்தனர். இந்நிலையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி கவலை அடைய செய்துள்ளது.

    இதனால் ட்விட்டரில் #vijayakanth என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு, டிரெண்டிங் ஆக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ள விஜயகாந்த் ஹாஷ்டேக்கில் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சிலர் கேட்டுள்ளனர்.

    English summary
    Vijakanth in twitter trending...fans pray for his speedy recovery
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X