»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த நடிகர் விஜயகாந்த் ரசிகர்கள் பலர்போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் விஜயகாந்த் ரசிகர்கள் சிலர் தேர்தலில் போட்டியிட மனுச் செய்திருந்தனர்இதுகுறித்து விஜயகாந்த் ரசிகர்கள் மன்றத் தலைமைக்குத் தகவல் போனது. இதையடுத்து உடனடியாகபோட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு மாநிலப் பொதுச் செயலாளர் வசந்தன் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக தஞ்சாவூர் மாவட்ட விஜயகாந்த் ரசிகர் மன்றத்தலைவர் சங்கர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், பேராவூரணி, ஓரத்தநாடு, திருவிடைமருதூர் ஆகியதொகுதிகளில் போட்டியிட ரசிர்கள் மனு செய்திருந்தனர்.

கட்சித் தலைமைக் கட்டளைப்படி தற்போது போட்டியிலிருந்து விலகிக் கொண்டுள்ளோம். விஜயகாந்த் ரசிகர்மன்றக் கொடி மற்றும் விஜயகாந்த் படத்தை அரசியல் தலைவர்கள் சிலர் பயன்படுத்துவதாக அறிகிறோம்.அவ்வாறு அவர்கள் செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்போம் என்றுகூறியுள்ளார்.

Read more about: actress, admk, chennai, cinema, tamilnadu
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil