»   »  விஜய் 59: பர்ஸ்ட் லுக், தலைப்பு இரண்டும் ஒரே நாளில்

விஜய் 59: பர்ஸ்ட் லுக், தலைப்பு இரண்டும் ஒரே நாளில்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 59 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகின்ற 26 ம் தேதி வெளியிடவிருப்பதாக படத்தின் இயக்குநர் அட்லீ தெரிவித்திருக்கிறார்.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன் மற்றும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி வரும் படம் விஜய் 59. கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் போலீஸ் கதையாக உருவாகி வரும் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் இரண்டையும் வருகின்ற 26 ம் தேதி வெளியிடவிருப்பதாக படத்தின் இயக்குநர் அட்லீ அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்து வரும் இப்படத்தில் விஜய்யின் மகளாக மீனாவின் 3 வயது குழந்தை நைனிகா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

காக்கி, தாறுமாறு என்று பல்வேறு பெயர்களும் அடிபட்டு வரும் நிலையில் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று அறிய விஜய் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

English summary
Vijay 59 Director Atlee Tweeted "Dear all First look of my next with actorvijay na #Vijay59 will be out on 26th of this month. 3 days to go".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil