»   »  விஜய் 60: முதன்முறையாக விஜய்யுடன் மோதும் டேனியல் பாலாஜி

விஜய் 60: முதன்முறையாக விஜய்யுடன் மோதும் டேனியல் பாலாஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 60 படத்தின் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் விவரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

'தெறி' படத்தைத் தொடர்ந்து 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு விவரங்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Vijay 60 Cast and Crew Details

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் என 2 நாயகிகள் விஜய்க்கு ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு 2 வில்லன்கள் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.

அதன்படி டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு என 2 வில்லன்களுடன் விஜய் மோதவிருக்கிறார். மேலும் ஸ்ரீமன், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன், ஹரிஸ் உத்தமன், மைம் கோபி ஆகியோரும் இப்படத்தில் நடிக்கவுள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு சுகுமாறன் ஒளிப்பதிவு செய்கிறார். 'வேட்டையாடு விளையாடு' படத்தில் டேனியல் பாலாஜியின் வில்லத்தனம் பெரிதும் பேசப்பட்டது.

அதேபோல இப்படத்திலும் வில்லனாக டேனியல் பாலாஜி முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Vijay 60 Cast and Crew Details now Revealed.
    Please Wait while comments are loading...

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil