»   »  தீபாவளி செண்டிமெண்டுக்காக ரெடியாகும் 'விஜய் 60'... தலைப்பு 'எங்க வீட்டுப் பிள்ளை'?

தீபாவளி செண்டிமெண்டுக்காக ரெடியாகும் 'விஜய் 60'... தலைப்பு 'எங்க வீட்டுப் பிள்ளை'?

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

விஜய்க்கும் தீபாவளிக்கும் என்ன ராசியோ... அன்று ரிலீஸாகும் அவரது படங்கள் பெரும்பாலும் ஹிட் அடித்துவிடும்.

கத்தி, துப்பாக்கி,வேலாயுதம், சிவகாசி, திருமலை என தீபாவளிக்கு வெளியான அனைத்து படங்களுமே ஹிட் தான். அந்த செண்டிமெண்டுக்காகவே விஜய், பரதன் இணைந்திருக்கும் படத்தை தீபாவளிக்கே ரிலீஸ் செய்ய பரபரப்பாக ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது.

எங்க வீட்டுப் பிள்ளை?

எங்க வீட்டுப் பிள்ளை?

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இரட்டை வேடங்கள், திருநெல்வேலி தமிழ் பேசுகிறார் தளபதி, என்று இப்போதே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

எங்க வீட்டுப் பிள்ளை

எங்க வீட்டுப் பிள்ளை

படத்துக்கு தலைப்பு எங்க வீட்டுப் பிள்ளை என ஒரு பக்கம் கொளுத்திவிட்டிருக்கிறார்கள். காரணம் படத்தைத் தயாரிக்கும் விஜயா நிறுவனம்தான் எம்ஜிஆரின் எங்க வீட்டுப் பிள்ளையைத் தயாரித்தது.

சென்டிமென்ட்

சென்டிமென்ட்

இதுதவிர இன்னொரு செண்டிமெண்டும் ஓடுகிறது. அதாவது ஒரே ஆண்டில் இரண்டு விஜய் படங்கள் ரிலீஸ் ஆனால் இரண்டுமே ஹிட் அடிக்கும் அல்லது இரண்டில் ஒன்றாவது சூப்பர் ஹிட் அடிக்குமாம். ஆனால் ஒரே ஒரு படம் மட்டும் ரிலீஸ் ஆனால் அந்த படம் தோல்விதானாம். உதாரணத்துக்கு போன வருடம் புலி மட்டும் ரிலீஸ் ஆனது. அதனால் தோல்வி. 2013ல் தலைவா மட்டும் தான் ரிலீஸ். அதுவும் தோல்வி. 2010 ல் சுறா மட்டும் தான் ரிலீஸ். 2008 ல் குருவி மட்டும் தான் ரிலீஸ். அனைத்துமே தோல்வி படங்கள்.

ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு

ஆனால் இரண்டு படங்கள் ரிலீஸ் ஆன ஆண்டுகளான 2014(ஜில்லா, கத்தி), 2012(நண்பன், துப்பாக்கி), 2011(காவலன், வேலாயுதம்), 2007(போக்கிரி, அழகிய தமிழ்மகன்), 2004 (கில்லி, மதுர) என நீள்கிறது இந்த பட்டியல். எனவே இந்த ஆண்டிலேயே படத்தை ரிலீஸ் செய்தால் படம் நிச்சயம் ஹிட் என எதிர்பார்க்கிறார்கள் ரசிகர்கள். ரசிகர்களின் எதிர்பார்ப்பு விஜய்க்கு தெரியாதா என்ன?

தீபாவளிக்கு

தீபாவளிக்கு

எனவே இந்த இரட்டை ரிலீஸ் மற்றும் தீபாவளி சென்டிமென்ட்டுகளை மனதில் வைத்து படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப் போகிறார்களாம். போட்றா வெடிய!

English summary
Sources say that Vijay is planning to release his 60th movie on Deepavali 2016.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil