»   »  விஜய் 60... எஸ்.ஜே.சூர்யா உடன் இணையும் விஜய்?

விஜய் 60... எஸ்.ஜே.சூர்யா உடன் இணையும் விஜய்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடித்த 'புலி' படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. அட்லீ இயக்கத்தில் 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது, இந்த நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் 60வது படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எப்போதுமே ஒரு படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் போது, தனது அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்பதை முடிவு செய்து அதற்கான பணிகளை துவக்குவது விஜய்யின் வழக்கம்.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக பணியாற்றும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். தாணு தயாரித்து வருகிறார்.

தற்போது தனது அடுத்த படத்தின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா என்று முடிவு செய்து வைத்திருக்கிறாராம் விஜய். 'தலைவா' படத்தை தயாரித்த சந்திரபிரகாஷ் ஜெயின் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா

எஸ்.ஜே.சூர்யா

தனது 60வது படமாக இருப்பதால், புதுமையான கதை பண்ண வேண்டும் என்று முடிவெடுத்து எஸ்.ஜே.சூர்யாவை விஜய் தேர்ந்தெடுத்து இருக்கிறார் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஓகே சொன்ன விஜய்

ஓகே சொன்ன விஜய்

விஜய்யிடம் சொன்ன ஒரு வரிக்கதைக்கு எஸ்.ஜே.சூர்யா திரைக்கதை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்க்கை கொடுத்த இயக்குநர்

வாழ்க்கை கொடுத்த இயக்குநர்

இசை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், எனக்கு 'குஷி'க்கு முன் வாழ்வா சாவா என்கிற நிலை இருந்தது. இந்தப் படமும் ஓடவில்லை என்றால் என்னாகும் என்ற கேள்வி இருந்தது. அந்த நேரத்தில் 'குஷி' என்கிற வெற்றிப் படம் கொடுத்து என்னைத் தூக்கிவிட்டவர் சூர்யா. இப்போது அதற்கு நன்றி சொல்கிறேன் என்று கூறியிருந்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்

நீண்ட இடைவெளிக்குப்பிறகு தற்போது எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் விஜய் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி ஆகிய வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். விஜய் தனது 60 வது படத்திற்காக யாரை டிக் அடிக்கப் போகிறாரோ?

English summary
Now the hot topic gossiped by everyone in Kollywood is, who will be his next director for Vijay’s upcoming project being called as Vijay 60. Various names have been involved in this gossip, but the much awaited names are with prominent ones like AR Murugadoss and SJ Surya in contention.

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil