»   »  விஜய்க்காக மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்படும் ஹீரோயின்

விஜய்க்காக மேற்கு வங்கத்தில் இருந்து வரவழைக்கப்படும் ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 60 படத்தில் மூன்றாவது ஹீரோயினாக மேற்கு வங்கத்தை சேர்ந்த பாப்ரி கோஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பரதன் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம் விஜய் 60. இதில் கீர்த்தி சுரேஷ், அபர்னா வினோத் என இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர். இந்நிலையில் பெங்காளி நடிகை பாப்ரி கோஷும் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Vijay 60 gets a heroine from West Bengal

பாப்ரி கோஷ் எஸ்.ஏ. சந்திரசேகரன் எழுதி, தயாரித்து, இயக்கிய டூரிங் டாக்கீஸ் படம் மூலம் கோலிவுட் வந்தவர். முதலில் தந்தையின் படத்தில் நடித்த அவர் தற்போது அவரின் மகன் விஜய்யுடன் நடிக்க உள்ளார்.

படத்தில் பாப்ரிக்கு ஒரு பாடலும் உள்ளது. அவர் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷுடன் சில காட்சிகளில் வருகிறார். விஜய்யின் பாஸாக ஒய்.ஜி. மகேந்திரன் நடிக்கிறார். அவரின் மகளாக பாப்ரி நடிக்கிறார்.

படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படம் குறித்த எந்த தகவலும் வெளியே கசிந்துவிடாமல் படக்குழுவினர் பார்த்துக் கொள்கிறார்கள்.

English summary
According to the latest report, Bengali actress Papri Ghosh, who made her Tamil acting debut with SA Chandrasekhar directed Touring Talkies, has bagged an important role in 'Vijay 60'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil