»   »  விஜய்யின் 60வது படம்... முன்கூட்டியே லீக் ஆன தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் #Vijay60 #Bhairava

விஜய்யின் 60வது படம்... முன்கூட்டியே லீக் ஆன தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் #Vijay60 #Bhairava

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் 60வது படத்தின் தலைப்பும் முதல் தோற்றப் போஸ்டரும் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று வெளியாகவில்லை. இன்றுதான் இரண்டும் வெளியாகியுள்ளது. ஆனால் முன்கூட்டியே லீக் ஆகி விட்டது.

விஜய்யின் 60 வது படத் தலைப்பு... பைரவா!

கூலர்ஸ், கோட் சூட் போட்டுக் கொண்டு ஒரு சைக்கிள் ரிக்ஷா மீது ஏறி நின்றபடி போஸ் கொடுக்கிறார் விஜய். இதுதான் பைரவா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.

Vijay 60 is Bhairava!

இந்தப் படத்தை அழகிய தமிழ் மகன் படத்தைத் தந்த பரதன் எழுதி இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் தலைப்பு குறித்து வலைத் தளங்களில் ஏகப்பட்ட யூகங்கள் வலம் வந்தன. தளபதி, எங்க வீட்டுப் பிள்ளை என்றெல்லாம் கூறி வந்தார்கள். ஆனால் யாரும் எதிர்ப்பார்க்காத ஒரு தலைப்பைத் தேர்வு செய்துள்ளனர். எழுபதுகளில் பைரவி படத்தில் நாயகனாக நடித்தார் ரஜினி. முதல் முதலில் ஹீரோவாக அவர் நடித்த படம் பைரவிதான்.

இப்போது விஜய்க்காக பைரவியை பைரவா ஆக்கிவிட்டார்கள் போலிருக்கிறது.

இந்த தலைப்பையும் போஸ்டரையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பாகவே காலையிலேயே லீக் ஆகி விட்டது. நாளை விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் இன்று தலைப்பும் போஸ்டரும் இணையத்தில் கசிந்துவிட்டதால் தற்போது விஜய்யே தனது டிவிட்டர் பக்கத்தில் இதை அறிவித்து விட்டார்.

    English summary
    Vijay's 60th film first look poster and title has been leaked today.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil