»   »  சிவகார்த்தியைத் தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி போடும் கீர்த்தி சுரேஷ்?

சிவகார்த்தியைத் தொடர்ந்து விஜய்யுடன் ஜோடி போடும் கீர்த்தி சுரேஷ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அழகிய தமிழ்மகன் பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் விஜய் 60 படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜய் தற்போது அவரது 59 படமான 'தெறி' படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருக்கிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக எமிஜாக்சன், சமந்தா இருவரும் நடித்திருக்கின்றனர்.

விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இப்படத்தின் அடுத்த கட்ட பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன.

விஜய் 60

விஜய் 60

தெறியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 'விஜய் 60' படத்திற்கான பூஜையானது சமீபத்தில் விஜயா புரொடக்ஷன்ஸ் அலுவலகத்தில் மிக எளிமையாக நடைபெற்றது. இப்பூஜையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் பரதன் மற்றும் தயாரிப்பாளர் பாரதி ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலில் பாடல்கள்

முதலில் பாடல்கள்

இந்தப் படத்தைப் பொறுத்தவரை முதலில் பாடல்களை முடித்து விட்டு பின்னர் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதன் படப்பிடிப்பு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வில்லன்

வில்லன்

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இப்படத்தில் வில்லனாக நடிக்க படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். இதற்காக அவர் வாங்குவதை விட 2 மடங்கு அதிகமான சம்பளம் அவருக்கு தரப்படவுள்ளதாம்.

கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ்

இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்யின் ஜோடியாக நடிக்க 'ரஜினிமுருகன்' புகழ் கீர்த்தி சுரேஷை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறுகின்றனர். முன்னதாக காஜல் அகர்வால், மியா ஜார்ஜ் பெயர்கள் அடிபட்ட நிலையில் மியா ஜார்ஜ் அதற்கு மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Rajinimurugan Fame actress Keerthy Suresh to Act as Heroine in Vijay - Bharathan's Next Film. The Official Announcement will be Expected Soon.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil