»   »  விஜய் படம்... ஹைதராபாதில் இன்று தொடங்கியது இரண்டாவது ஷெட்யூல்!

விஜய் படம்... ஹைதராபாதில் இன்று தொடங்கியது இரண்டாவது ஷெட்யூல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிக்கும் 60வது படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

இந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் இரு பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டன. அவற்றில் ஒன்று விஜய்யின் ஆர்ப்பாட்டமான அறிமுகப் பாடல் காட்சி. இன்னொன்று மிக ஆடம்பரமான திருமணக் காட்சி.

படக்குழுவினர் இதுகுறித்துக் கூறுகையில், "இரு காட்சிகளுமே அருமையாக வந்துள்ளன. திருமணப் பாடல் காட்சியில் விஜய்யுடன் நாயகி கீர்த்தி சுரேஷ் இடம்பெற்றுள்ளார்," என்றனர்.

Vijay 60.. Second schedule begins at Hyderabad

பரதன் இயக்கும் இந்தப் படத்தின் அடுத்த கட்ட ஷூட்டிங் ஹைதராபாதில் இன்று தொடங்கியது. இங்கு ஒரு மாதம் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

கிராமப் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்கிறார் ஜெகபதி பாபு. இன்னொரு வில்லன் டேனியல் பாலாஜி. அபர்னா வினோத், சரத் லோஹிதஸ்வா, மைம் கோபி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மைனா சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

    English summary
    The second schedule of Vijay 60 commences today in Hyderabad.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil