»   »  பரதன் இயக்கத்தில் தொடங்கியது விஜய் 60

பரதன் இயக்கத்தில் தொடங்கியது விஜய் 60

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகவிருக்கும் விஜய் 60 படப்பிடிப்பிற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியில் படக்குழு இறங்கியுள்ளது.

விஜய் தற்போது தெறி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இப்படம் வருகின்ற தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் திரைக்கு வரவுள்ளது.

தெறி படத்துக்குப் பின் 'அழகிய தமிழ் மகன்' பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் படத்திற்கான தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்வு செய்து விட்ட பரதன், அடுத்ததாக படப்பிடிப்பிற்கான இடங்களை தேர்வு செய்து வருகிறார்.

இதற்காக தனது குழுவுடன் அவர் ஹைதராபாத் சென்றிருக்கிறார். ராஜமுந்திரி போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருக்கும் பரதன் அதற்கு ஏற்றவாறு இடங்களை தேர்வு செய்து வருகிறார்.

தற்போது விஜய் 60 படக்குழு இடங்களை தேர்வு செய்யும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

ஏப்ரல் இறுதியில் துவங்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கிறது.

English summary
Vijay 60: Director Bharathan and Team Select some Shooting Locations in Hyderabad.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil