»   »  2 வில்லன்களுடன்... ஏப்ரல் 11 ல் தொடங்கும் "விஜய் 60"?

2 வில்லன்களுடன்... ஏப்ரல் 11 ல் தொடங்கும் "விஜய் 60"?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 60 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 11 ம் தேதி தொடங்குகிறது, எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கப்போகும் விஜய் 60 கோலிவுட்டில் பலத்த எதிர்பார்ப்பை உண்டு பண்ணியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 11 ம் தொடங்குகிறது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் படத்தில் இன்னொரு வில்லனாக டேனியல் பாலாஜியை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Vijay 60 Shooting Starts April 11

ஏற்கனவே ஜெகபதி பாபுவை வில்லனாக ஒப்பந்தம் செய்திருக்கும் நிலையில், தற்போது டேனியல் பாலாஜியும் உள்ளே வந்திருக்கிறார்.

இதனால் காதலுக்கு ஈடாக, ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் அதிகம் இருக்கும் என விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ரசிகர்களின் இந்தக் கொண்டாட்டத்தால் #Vijay60 மற்றும் #Vijay60 Team போன்ற ஹெஷ்டேக்குகள் ட்விட்டரில் தற்போது டிரெண்டாகி வருகிறது.

வருகின்ற 14 ம் தேதி விஜய்யின் 'தெறி' உலகம் முழுவதும் வெளியாகிறது.இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.

கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?

English summary
Sources Said Vijay 60 Shooting Starts from April 11.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil