»   »  விஜய் 60 அப்டேட்: கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் செட்டில் மாஸ் பைட்... கீர்த்தி சுரேஷின் உற்சாகம்

விஜய் 60 அப்டேட்: கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் செட்டில் மாஸ் பைட்... கீர்த்தி சுரேஷின் உற்சாகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் 60 படத்துக்காக கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.

விஜய்யின் 60 வது படத்தை பரதன் இயக்கி வருகிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.

ஒரு கதாபாத்திரம் திருநெல்வேலியை சேர்ந்ததாக காட்டியிருக்கிறார்கள். அந்த கதாபாத்திரத்துக்காக நெல்லை பேச்சு வழக்கை விஜய் கற்று வருகிறார். திருநெல்வேலி பாஷையில் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவரை அதற்கென்றே பிரத்யேகமாக நியமித்துள்ளனர்.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்

கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்

இந்த படத்துக்காக கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய் 60 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது.

கூட்ட நெரிசலை தவிர்க்க

கூட்ட நெரிசலை தவிர்க்க

விஜய்யை வைத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பு நடத்தினால் திருவிழா கூட்டமாகிவிடும், பேருந்துகள் ஒரு அங்குலம் நகர்வதே சிரமமாகிவிடும் என்பதால், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று அரங்கை பல லட்சம் செலவில் அமைத்துள்ளனர்.

சண்டைக்காட்சி

சண்டைக்காட்சி

ஹைதராபாத்தில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியை தொடர்ந்து தற்போது கோயம்பேடு பேருந்து நிலையம் போன்று அமைக்கப்பட்ட அரங்கில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் பரதன்.

கால்ஷீட் பிரச்சினை

கால்ஷீட் பிரச்சினை

விஜய்யின் ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் உற்சாகத்தில் திளைத்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக நடிப்பேன் என்று நினைத்து பார்த்ததில்லை. தமிழில் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்தாலும், கால்ஷீட் பிரச்னை இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார் கீர்த்தி.

அம்மா தலையிட மாட்டார்

அம்மா தலையிட மாட்டார்

எனது விஷயத்தில் அம்மா தலையிடமாட்டார். நான்தான் அவரிடம் எல்லா விஷயத்தையும் பகிர்ந்து கொள்வேன் என்கிறார். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் வில்லனாக ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி ஆகியோரும் நடிக்கின்றனர்.

மீண்டும் ஒரு கில்லி

மீண்டும் ஒரு கில்லி

பக்கவான கமர்ஷியல் பார்முலாவில் உருவாகவிருக்கும் இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு கில்லியாக இருக்கும் என்று சொல்கிறார்கள். விஜய் 60 படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

English summary
Ilayathalapathy Vijay, who is currently shooting for his upcoming film 'Vijay 60', Chennai schedule underway briskly now. Koyambedu bus stand has been recreated on set by art director Prabhakaran.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil