»   »  பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61': ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகாஸ்

பூஜையுடன் துவங்கிய 'விஜய் 61': ட்விட்டரை தெறிக்க விட்ட ரசிகாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் இன்று துவங்கியுள்ளது.

Vijay 61 kick starts today

தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் விஜய் 61. படத்தின் பூஜை சென்னை இசிஆரில் உள்ள பனையூரில் இருக்கும் ஆதித்யாராம் ஸ்டுடியோஸில் இன்று நடந்தது.

அதன் பிறகு பின்னி மில்ஸில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில் படப்பிடிப்பு துவங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார்.

இந்நிலையில் தளபதி ரசிகர்கள் படப்பிடிப்பு துவங்கியதை பற்றியே பேசி THALAPATHY61 KICK STARTS என்பதை ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாக விட்டுள்ளனர்.

ட்விட்டரில் ஒரு விஷயத்தை டிரெண்டாக விடுவதில் தல, தளபதி ரசிகர்கள் பலே ஆட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay's upcoming movie Vijay 61 has got kick started on wednesday. This movie is being directed by Atlee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil