»   »  பிறந்த நாள் ஸ்பெஷல்.... விஜய் 61 படத் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு!

பிறந்த நாள் ஸ்பெஷல்.... விஜய் 61 படத் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் படத்தின் 61 வது படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாளையே வெளியிடப் போவதாக படத்தின் தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் பிறந்த நாள்

விஜய் பிறந்த நாள்

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளான ஜுன் 22-ந் தேதி வெளிவரும் என படக் குழுவினர் முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸை ஒரு நாள் முன்பாகவே, விஜய் பிறந்த நாளையொட்டி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.

நாளை

நாளை

அதன்படி, நாளை (ஜுன் 21) மாலை 6 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு வெளியாகவுள்ளது. ஒரு நாள் முன்பாகவே விஜய் பிறந்த நாளை ரசிகர்கள் கொண்டாட வசதியாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளது.

100 வது படம்

100 வது படம்

இந்தப் படம் தேனாண்டாள் நிறுவனத்துக்கு 100-வது படமாகும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகி வருகிறது

அக்டோபர் ரிலீஸ்

அக்டோபர் ரிலீஸ்

வரும் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். தேனாண்டாள் நிறுவனத்துக்காக முரளி ராமசாமி இப்படத்தைத் தயாரிக்கிறார்.

English summary
Vijay's 61st movie title and first look will be launched on Tomorrow as a part of Vijay birthday celebration.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil