»   »  விஜய் 61... அண்ணாமலை கதை... எண்பதுகளில் நடக்கும் ப்ளாஷ்பேக்?

விஜய் 61... அண்ணாமலை கதை... எண்பதுகளில் நடக்கும் ப்ளாஷ்பேக்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பைரவாவுக்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தின் கதை அண்ணாமலையின் தழுவல் என்று ஏற்கெனவே தகவல் வெளியாகியுள்ளது. இப்போது இன்னொரு புதிய தகவல்... இந்தப் படத்தின் ப்ளாஷ்பேக் மட்டும் எண்பதுகளில் நடப்பது போன்று எடுக்கப் போகிறார்களாம்.

அட்லீ இயக்கும் இந்தப் படத்தில் விஜய்யுடன் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், சமந்தா, காஜல் அகர்வால், ஜோதிகா, கோவை சரளா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்களாம்.

Vijay 61 updates

இந்நிலையில், இப்படத்தின் ப்ளாஷ்பேக் காட்சிகள் எண்பதுகளில் நடப்பது போல எடுக்கத் திட்டமிட்டுள்ளாராம் இயக்குநர் அட்லீ. அதில் விஜய் தாடி, மீசையுடன் தோன்றப் போகிறாராம். இந்த ப்ளாஷ்பேக் காட்சிகளை மதுரையில் படமாக்கவுள்ளதாகக் கூறுகிறார்கள்.

இதன் படப்பிடிப்பு பிப்ரவரி 1-ந் தேதி தொடங்கவிருக்கிறது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

அட்லீ இயக்கிய முதல் படம் மௌன ராகத்தின் சாயலில் வந்தது. அடுத்த படம் தெறி, சத்ரியன் பட ரீமேக்காக வந்தது நினைவிருக்கலாம்.

English summary
Sources say that director Atlee is planning to shoot the flashback scenes of Vijay 61 in eighties backdrop.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil