»   »  விஜய் 62... நாள் குறிச்சாச்சி!

விஜய் 62... நாள் குறிச்சாச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் - ஏ ஆர் முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் படத்தை வரும் பிப்ரவரி மாதம் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

துப்பாக்கி, கத்தி படங்களுக்குப் பிறகு விஜய்யும் முருகதாசும் இந்தப் படத்தில் இணைகின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

Vijay 62 in Feb 2018

படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகளில் இயக்குநர் முருகதாஸ் மும்முரமாக உள்ளார். முதல் கட்டமாக படத்தின் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் பற்றிய தகவல்கள் வெளியாகின.

அங்கமாலி டைரீஸ், சோலோ போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஸ் கங்காதரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் வேதா படத்தின் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இசையமைக்கிறார் என தெரியவந்துள்ளது.

அடுத்து படத்தின் நடிகர் நடிகை தேர்வு நடைபெறுகிறது.

ஸ்க்ரிப்ட் பணிகள் வரும் ஜனவரியில் முழுமை பெற்றுவிடும் என்றும், பிப்ரவரியில் படப்பிடிப்பைத் தொடங்குவது என்றும் திட்டமிட்டுள்ளனர்.

இந்தப் படம் விஜய்யின் 62 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Vijay - Murugadass's new movie will be floored on February 2018.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X