»   »  விஜய்யை அசத்திய இரட்டையர்கள்.. முருகதாஸின் ஷூட்டிங் சென்டிமென்ட்! #Vijay62

விஜய்யை அசத்திய இரட்டையர்கள்.. முருகதாஸின் ஷூட்டிங் சென்டிமென்ட்! #Vijay62

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'விஜய் 62' படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது.

சென்னை ஷெட்யூல் முடிவடைந்ததை தொடர்ந்து இப்போது கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.

'கத்தி' படத்தின் ஷூட்டிங் நடந்த இடங்களில் சென்டிமென்டிற்காக சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி விட்டு பின்னர் வேறு பகுதியில் படப்பிடிப்பு நடத்துகிறாராம் முருகதாஸ்.

விஜய் 62

விஜய் 62

'துப்பாக்கி', 'கத்தி' படங்களைத் தொடர்ந்து விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணைந்துள்ள 'விஜய் 62' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக 'பைரவா' படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ் மீண்டும் நடிக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசை

ஏ.ஆர்.ரஹ்மான் இசை

'மெர்சல்' படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகப் பணியாற்றவிருக்கிறார்.

சென்னை ஷூட்டிங்

சென்னை ஷூட்டிங்

விவசாயம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும் இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது. படத்தின் டைட்டில் பாடலும் உருவாகி இருக்கிறதாம். இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடக்கிறது.

சென்டிமென்ட்

சென்டிமென்ட்

'கத்தி' படத்தின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் முன்பு நடைபெற்ற லொக்கேஷன்களில் சென்டிமென்டிற்காக மீண்டும் சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி விட்டு பின்னர் வேறு பகுதியில் படப்பிடிப்பு நடத்துகிறாராம் முருகதாஸ்.

ஆக்‌ஷன் காட்சிகள்

கொல்கத்தாவில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெற உள்ளதாம். கொல்கத்தாவில் இப்போது நடந்து வரும் படப்பிடிப்பில் விஜய் சம்பந்தப்பட்ட அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

இரட்டை ஸ்டன்ட் மாஸ்டர்கள்

இரட்டை ஸ்டன்ட் மாஸ்டர்கள்

தெலுங்கு படவுலகில் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர்களாக விளங்கும் ராம், லக்ஷமண் என்ற இரட்டையர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். ராம் - லக்‌ஷ்மண் இணைந்து சண்டைக்காட்சிகளைப் படமாக்கி வருகின்றனர்.

அசந்துபோன விஜய்

அசந்துபோன விஜய்

இந்த இரட்டையர்கள் விஜய் நடிக்கும் படத்தில் இணைந்து பணியாற்றுவது இது தான் முதல் முறை. எனவே தங்களுடைய முழுத்திறமையைக்காட்டும் வகையில் சண்டைக்காட்சிகளை எடுத்து வருகின்றனர். ராம் லக்‌ஷ்மண் திறமையைப்பார்த்து விஜய்யே அசந்துபோயிருப்பதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

English summary
'Vijay 62' shooting was started in Chennai some weeks ago. Following the completion of first schedule, it is taking place in Kolkata. Ram and Laxman are the famous stunt masters in Telugu film industry recently joined in 'Vijay 62' crew.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil