twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார்ப்பரேட் விவசாயம் பற்றிப் பேசும் விஜய்... 'தளபதி 62' கதை இதுதான்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    கார்ப்பரேட் விவசாயம் பற்றிப் பேசும் விஜய்- வீடியோ

    சென்னை : விஜய்யின் 62-வது திரைப்படம் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கியுள்ளது.

    'கத்தி' படத்தைப் போல இப்போதும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையைத்தான் படமாக்குகிறார் முருகதாஸ்.

    'விஜய் 62' படத்தின் கதை தொடர்பான தகவல்கள் கசிந்திருக்கின்றன. இப்படத்தில், கார்ப்பரேட்டுகளின் பிடியில் விவசாயம் இருப்பதை சுட்டிக்காட்ட இருக்கிறாராம் விஜய்.

    விஜய் 62

    விஜய் 62

    விஜய்யை வைத்து 'துப்பாக்கி', 'கத்தி' ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யின் 62-வது படத்தை தற்போது இயக்கி வருகிறார். துப்பாக்கி படத்தில் ராணுவ வீரரைப்பற்றிய கதையை படமாக்கிய ஏ.ஆர்.முருகதாஸ், கத்தியில் விவசாயிகள் பிரச்னையை படமாக்கினார்.

    விஷத்தன்மை கொண்ட பொருட்கள்

    விஷத்தன்மை கொண்ட பொருட்கள்

    விஜய் 62 படத்திலும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட கதையைத்தான் படமாக்குகிறார் முருகதாஸ். இந்தப் படத்தில் விவசாயிகளின் பிரச்னை மட்டுமின்றி, உலக மக்களுக்கே உணவு கொடுக்கும் விவசாயிகள், அவர்களுக்கே தெரியாமல் மனிதனுக்கு கேடு விளைவிக்கும் விஷத்தன்மை வாய்ந்த உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் விஷயத்தையும் சொல்லப் போகிறார்களாம்.

    பூச்சிக்கொல்லி விவசாயம்

    பூச்சிக்கொல்லி விவசாயம்

    அதாவது, சமீபகாலமாக ரசாயன உரம், நவீன மருந்துகள் என்கிற அடிப்படையில் பூச்சிக்கொல்லி மருந்துகளும் அளவுக்கதிகமாக பயிர்களில் தெளிக்கப்படுகிறது. இதனால் பயிர் செய்யப்படும் உணவு பொருட்கள் விஷத்தன்மை வாய்ந்ததாகவும், ஆரோக்கியமில்லாமலும் உற்படுத்தி செய்யப்படுகிறது.

    மனிதர்களுக்கான பாதிப்பு

    மனிதர்களுக்கான பாதிப்பு

    இப்படி உற்பத்தியாகும் உணவுகளை உட்கொள்ளும் மனிதன் எந்தெந்த வகையில் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறான். இதனால் எதிர்கால சந்ததியின் நிலை என்னவாகும் என்கிற ரீதியில் ஒரு கதையை சமூகத்துக்கு அழுத்தமாக பதிவு செய்கிறாராம் ஏ.ஆர்.முருகதாஸ்.

    கார்ப்பரேட் விவசாயம்

    கார்ப்பரேட் விவசாயம்

    இயற்கை விவசாயம் என்பதே அழிந்து, கார்ப்பரேட் நிறுவனங்களின் பூச்சிக்கொல்லி மருந்துகளும், செயற்கை உரங்களும் நிறைந்த விவசாயம் தான் இன்று நடைபெறுகிறது. இந்தச் சூழலில் விஜய் நடிக்கும் படத்தில் இவற்றைப் பேசவிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    கீர்த்தி சுரேஷ்

    கீர்த்தி சுரேஷ்

    விஜய்யின் 62-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். சென்னை முட்டுக்காடு பகுதியில் 'விஜய் 62' ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

    ஷூட்டிங் தொடக்கம்

    ஷூட்டிங் தொடக்கம்

    இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். கடந்த ஜனவரி 19-ம் தேதி முதல் பூஜையுடன் துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

    டைட்டில்?

    டைட்டில்?

    'தளபதி 62' படத்தை இந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் 'வனமகன்' சாயிஷா சைகல் இணையவிருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. வெகு விரைவில் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

    English summary
    AR Murugadoss is filming the story about farmers in 'Vijay 62' movie like 'Kaththi'. Agricluture is the main story of 'Thalapathy 62' movie. In addition to the farmers issue in this film, the farmers are not aware of the fact that they are producing poisonous food for human beings.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X