»   »  விஜய்க்கு வில்லனாக பிரபல அரசியல்வாதி.. விஜய் 62 அப்டேட்!

விஜய்க்கு வில்லனாக பிரபல அரசியல்வாதி.. விஜய் 62 அப்டேட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
வைரயிலாகும் விஜய் 62 போட்டோ!

சென்னை : நடிகர் விஜய்யின் அடுத்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த கூட்டணி இணைவது இது மூன்றாவது முறை என்பதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

'தளபதி 62' படத்திற்கான ஷூட்டிங், சென்னை, மும்பை பகுதிகளில் முடிந்து மீண்டும் சென்னையில் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் வில்லனாக முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் 62

விஜய் 62

'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். விஜய்யின் திரைப் பயணத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'துப்பாக்கி', 'கத்தி' ஆகியவை வெற்றிப் படங்களாக அமைந்ததால் இப்படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்

ஹீரோயின் கீர்த்தி சுரேஷ்

விஜய்யின் 62-வது படமான இதை சன் பிக்‌சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். 'பைரவா' படத்தை அடுத்து மீண்டும் கீர்த்தி சுரேஷ் விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருக்கிறார்.

வில்லன்

வில்லன்

விஜய் பட வில்லன்கள் எப்போதுமே ஸ்பெஷல் தான். அவரது படங்களில் ஹீரோவுக்கு நிகரான பங்கு வில்லனுக்கும் இருக்கும். விஜய்யின் 62-வது படத்தில், அரசியல்வாதியும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பழ.கருப்பையாவை வில்லன் ஆக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

பழ.கருப்பையா

பழ.கருப்பையா

விவசாய பிரச்னைகளை முன்நிறுத்தும் படம் இது. இப்படத்தில் பழ.கருப்பையா நிலச்சுவான்தாராகவும், அரசியல்வாதியாகவுமே நடிக்க இருக்கிறாராம். பழ.கருப்பையா பல கட்சிகளிலும் பணியாற்றி இருக்கிறார்.

நடிகரும் கூட

நடிகரும் கூட

ஜெயலலிதா இருக்கும்போது அவரை எதிர்த்து பேசி அ.தி.மு.க-விலிருந்து வெளியேறினார். 'அங்காடித் தெரு' படத்தில் ரங்கநாதன் தெருவில் கடை நடத்தும் அண்ணாச்சியாக ஏற்கெனவே நடித்திருக்கிறார். இப்போது விஜய்க்கு வில்லனாக முருகதாஸ் படத்தில் நடிக்க இருக்கிறார்.

English summary
Politician, Ex.MLA Pazha.Karuppaiah to opposite villain for Vijay in 'Vijay 62' movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil