»   »  அமலா பாலுடனான பிரிவை உறுதி செய்தார் இயக்குநர் விஜய்

அமலா பாலுடனான பிரிவை உறுதி செய்தார் இயக்குநர் விஜய்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமலா பாலுடனான உறவு முறிவை இன்று உறுதி செய்தார் இயக்குநர் விஜய்.

விஜய் - அமலா பால் ஆகியோர் காதலித்து, 2014-ம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

Vijay acknowledges divorce from Amala

இப்போது இருவருக்கும் இடையே மணமுறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, அது பரபரப்பான செய்தியாகவும் ஆகிவிட்டது. அமலா பால் திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்துவருவதால் இதுதொடர்பாக இருவருக்கும் இடையே பூசல்கள் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றன.

விரைவில் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றம் போகவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் செய்திகள் குறித்து இயக்குநர் விஜய் ஒரு பேட்டியில் கூறும்போது, "இதுபற்றி நான் எதுவும் இப்போதைக்குப் பேச விரும்பவில்லை. என் பெற்றோர் எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்," என்றார்.

English summary
Director Vijay has acknowledged his separation from Amala Paul.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil