Don't Miss!
- Lifestyle
பலவீனமான சிறுநீரகங்களை வலுவாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய இயற்கை வழிகள்!
- News
தினசரி ரூ.2000, மாதம் ரூ.62,500 சம்பாதித்தால் வரி இல்லை.. பட்ஜெட்டில் சொன்ன முக்கிய விஷயமே இதுதான்!
- Finance
1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?!
- Automobiles
நேபாளத்தில் நம்ம ஊர் மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்!! விலைகளை மட்டும் பார்த்துடாதீங்க... இங்கு எவ்வளவோ பரவாயில்லை
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அப்படியெல்லாம் போஸ்டர் அடிக்காதீங்க.. கெட்ட வார்த்தை பேசாதீங்க.. ரசிகர்களுக்கு விஜய் அன்புக் கட்டளை!
சென்னை: வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதி திடீரென தனது ரசிகர்களை அடிக்கடி சந்தித்து வரும் நடிகர் விஜய் அவர்களுக்கு அட்வைஸ் அளித்திருக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி உள்ள வாரிசு படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
அஜித்தின் துணிவு படத்துடன் இந்த முறை விஜய்யின் வாரிசு நேரடி மோதலை எதிர்கொள்கிறது.
வாரிசு
'ரஞ்சிதமே’
பாட்டுக்கு
டான்ஸ்..
குயின்ஸி,
ஷெரினாவை
பங்கமாக
கலாய்க்கும்
பிக்
பாஸ்
ரசிகர்கள்!

பிரியாணி விருந்து
ரசிகர்களை சந்திக்க ஏற்பாடு செய்தவுடனே முதல் வேலையாக பிரியாணி விருந்து கொடுத்து விடும் பழக்கத்தை கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். கடந்த மாதம் பனையூரில் பிரியாணி விருந்து நடைபெற்ற நிலையில், நேற்றும் ரசிகர்களுக்கும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கும் பிரியாணி விருந்து போடப்பட்டிருக்கிறது.

விஜய்யின் புது லுக்
வாரிசு படத்தின் படப்பிடிப்பு மொத்தமும் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க சமீபத்தில் பூஜையும் போடப்பட்டது. அந்த படத்திற்காக லாங் ஹேர் மற்றும் கெடா மீசை லுக்கில் ரெடியாகி வரும் விஜய் அந்த லுக்குடனே நேற்றைய ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

ரசிகர்களுக்கு அன்புக் கட்டளை
பிரியாணி விருந்துக்கு பிறகு ரசிகர்களுடன் போட்டோஷூட்டும் நடத்தினார் நடிகர் விஜய். மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவரை விஜய் கைகளில் ஏந்தி எடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை நெகிழ வைத்தது. மேலும், ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அன்புக் கட்டளை போட்டிருக்கும் தகவல்களும் தற்போது வெளியாகி உள்ளன.

வருங்கால முதலமைச்சர்னு போஸ்டர் ஒட்டாதீங்க
எம்ஜிஆர் உருவத்தில் விஜய்யை வைத்தும், வருங்கால முதலமைச்சர் என்றும் ஏகப்பட்ட போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் ஒட்டி திணறடித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்றைய ரசிகர்கள் சந்திப்பின் போது, போஸ்டர்களில் இடம் பெறும் வார்த்தைகள் ரொம்ப கவனமாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் ரீதியான வார்த்தைகளை தவிர்த்து விடுங்கள் எனக் கூறியுள்ளார்.

பாலாபிஷேகம் வேண்டாம்
நடிகர் விஜய் ஆரம்ப காலத்தில் இருந்தே தனது கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் எல்லாம் வேண்டாம் என்றும் அந்த பணத்தில் நலத்திட்ட உதவிகளை செய்யுங்கள் என அன்புக் கட்டளை போட்டு வருகிறார். ஆனால், விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை தனியாக செய்கிறோம், படம் வரும் போது பாலாபிஷேகம் செய்கிறோம் என அவரது பேச்சை மீறி செயல்பட்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் அந்த விஷயத்தை அழுத்தம் திருத்தமாக கூறியுள்ளாராம்.

ஆபாச ட்ரோல்கள் வேண்டாம்
சோஷியல் மீடியாவில் விஜய் ரசிகர்களும், அஜித் ரசிகர்களும் பேசிக் கொள்வதை கேட்டாலே காதுகள் புளித்து விடும். மேலும், அவர்கள் இரண்டு நடிகர்களையும் போட்டோ மீம் ட்ரோல்கள் போடுகிறோம் என்கிற பெயரில் ரொம்பவே கேவலப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அப்படியெல்லாம் யாரும் எந்தவொரு நடிகரையும் மோசமாக சித்தரித்தோ, ஆபாச வார்த்தைகளால் திட்டியோ பேசவோ, போஸ்ட்டுகளை போடவோக் கூடாது எனக் கூறியுள்ளார்.

ரசிகர்கள் கேட்பார்களா
விஜய்யின் இந்த அன்புக் கட்டளையே சாசனம் என நினைத்து இனிமேலாவது விஜய் ரசிகர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பார்களா என்றால், அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்கின்றனர் நெட்டிசன்கள். குறைந்த பட்சம் அந்த ஆபாச சண்டையையாவது என்றால், அதுக்கெல்லாம் வாய்ப்பே கிடையாது என தெரிகிறது.