»   »  தெறி 2: பிரபுவுக்காக மீண்டும் இணையும் விஜய்-அட்லீ?

தெறி 2: பிரபுவுக்காக மீண்டும் இணையும் விஜய்-அட்லீ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவாஜி புரொடக்ஷன்ஸ்க்காக அட்லீ-விஜய் கூட்டணி மீண்டும் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அட்லீ-விஜய் முதன்முறையாக இணைந்த 'தெறி' கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இந்நிலையில் இந்தக் கூட்டணி மீண்டும் இணையப்போவதாக செய்திகள் பரவி வருகின்றன.

Vijay Again Join hands with Atlee

'தெறி' படத்தின் இறுதியில் 2 வது பாகம் தொடங்குவது போல காட்சிகள் இருக்கும். இதுகுறித்து அட்லீ ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பைப் பொறுத்து இப்படத்தின் 2 வது பாகம் உருவாகும் என்று கூறியிருந்தார்.

தற்போது பிரபுவின் சிவாஜி புரொடக்ஷன்ஸ்க்காக விஜய்-அட்லீ 2 வது முறையாக இணையப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பரதன் இயக்கத்தில் விஜய் தன்னுடைய 60 வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.இந்த சூழ்நிலையில் விஜய்யின் 61 வது படம் குறித்து செய்திகள் வெளியாவது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதேநேரம் அட்லீ-விஜய் மீண்டும் இணைந்தால் அது 'தெறி' படத்தின் 2 வது பாகமாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

சமீபகாலமாக ஏ.ஆர்.முருகதாஸ் தவிர்த்து வேறு எந்த இயக்குநருடனும் விஜய் 2 வது முறையாக பணியாற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Vijay Again Join Hands with Atlee for Theri Sequel.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil