Just In
- 14 min ago
பாண்டிராஜ் இயக்கும் படம்.. நடிகர் சூர்யா ஜோடியாக இந்த ஹீரோயின்தான் நடிக்கிறாராமே?
- 8 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 9 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 9 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
Don't Miss!
- Automobiles
எம்ஜி ஹெக்டர் ப்ளஸ் காரில் புதிய விலைமிக்க வேரியண்ட்!! இவ்வளவு வசதிகள் புதியதாக வழங்கப்பட்டுள்ளதா?!
- News
பிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்! .
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திணறும் ட்விட்டர்.. திடீரென மோதிக் கொண்ட அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள்.. என்ன விஷயம் தெரியுமா?
சென்னை: தளபதி விஜய், தல அஜித் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் திடீரென ட்விட்டரை தங்கள் வசமாக்கி தெறிக்கவிட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய் நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த செல்ஃபிக்கு ட்விட்டர் இந்தியா நிறுவனம் மிகப்பெரிய கவுரவத்தை கொடுத்ததும் தளபதி ரசிகர்கள் #VIJAYRuledTwitter2020 என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்று நடைபெற்ற 3வது டி20 போட்டியில் அஜித் ரசிகர்கள் தமிழக வீரர் நடராஜனை வாழ்த்திய பேனரை காண்பித்த நிலையில், #ThalaFansWishesNATARAJAN ஹாஷ்டேக் டிரெண்டானது.
சூர்யா ரசிகர்கள் மட்டும் என்ன சும்மா இருப்பார்களா, #SURIYARuledTwitter2020 என்ற ஹாஷ்டேக்கை தெறிக்க விட்டு வருகின்றனர்.
ஆரியை நோண்டுனா ஓட்டுக் கிடைக்குமா? இந்த வாரம் வெளியே போறது நீதான்மா.. நிஷாவை வெளுக்கும் ரசிகர்கள்!
|
ஆல் இந்தியாவுலயும் அய்யா கில்லி டா
அகில இந்திய அளவில் 2020ம் ஆண்டில் அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட போஸ்ட் என்றால், அது நம்ம தளபதி விஜய் மாஸ்டர் பட ஷூட்டிங்கில் இருந்தபோது, நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்த அந்த மாஸ் செல்ஃபி புகைப்படம் தான் என ட்விட்டர் இந்தியாவே அங்கீகாரம் கொடுத்துள்ளது. அதனை கொண்டாடும் விதமாக மாஸ்டர் படக்குழு ஆல் (ஏரியா) இந்தியாவுலயும் அய்யா கில்லி டா என அந்த அழகான மொமென்ட்டை வெளியிட்டு #VIJAYRuledTwitter2020 ஹாஷ்டேக்கை கொண்டாடி வருகிறது.
|
அந்த பேர்ல ஒரு கெத்து இருக்கு
யூடியூப் இந்தியா, நெட்பிளிக்ஸ், ட்விட்டர் என மற்ற எந்த இந்திய நடிகர்களுக்கும் இல்லாத அளவுக்கு செல்வாக்கை இந்த ஆண்டு தளபதி விஜய் பெற்றுள்ளார் என்றும், இதுதான் வெறித்தனம் ஓவர்லோடு, அந்த பேர்ல ஒரு கெத்து இருக்கு என தளபதி ரசிகர்கள் சமூக வலைதளங்களை ஆட்சி செய்து வருகின்றனர்.
|
வாழ்த்துக்கள் நடராஜன்
ட்விட்டர் இந்தியாவின் கவுரவத்தை வைத்து தளபதி ரசிகர்கள் ட்விட்டரை கொண்டாடி வரும் அதே நேரத்தில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியின் போது, மைதானத்தில் அஜித் ரசிகர்கள் செய்த தரமான சம்பவம் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் அபாராமாக விளையாடி வரும் நிலையில், வாழ்த்துக்கள் நடராஜன் என்ற பேனர்களை காட்டி அமர்க்களப்படுத்தி உள்ளனர்.
|
அஜித் ஆட்சி
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலும் அஜித்தின் ஆட்சி தான் என்றும், இது பல பிரபலங்களுக்கு கனவாவே போயிடும் என்று ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு #ThalaFansWishesNATARAJAN என்ற ஹாஷ்டேக்கை இந்தியளவில் அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
|
சும்மா விடுவார்களா சூர்யா ரசிகர்கள்
தல, தளபதி ரசிகர்கள் ட்விட்டரை ஒரு பக்கம் ஆட்சி செய்து கொண்டிருக்கும் நிலையில், சூர்யா ரசிகர்கள் மட்டும் என்ன சும்மாவா விடுவார்கள், #SURIYARuledTwitter2020 என்ற ஹாஷ்டேக்கை போட்டு சூர்யா ரசிகர்களும் தங்களின் கெத்தை காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு வெளியான இந்திய படங்களிலேயே சூரரைப் போற்று சூப்பரான படம் என சமந்தா உள்ளிட்ட பலர் சொன்ன நிலையில், சூர்யா ரசிகர்களும் புகுந்து விளையாடுகின்றனர்.
|
சூர்யாவின் நவரசா
சூரரைப் போற்று மட்டுமில்ல, சூர்யா ரசிகர்கள் தற்போது சூர்யாவை இந்தியளவில் டிரெண்ட் செய்து கொண்டாட இன்னொரு காரணமும் உள்ளது. கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் நவரசா வெப்சீரிஸின் எக்ஸ்க்ளூசிவ் மேக்கிங் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மிரள வைக்கும் தமிழ் சினிமா
தமிழ் சினிமாவின் டாப் 3 நாயகர்களான விஜய், அஜித், சூர்யா இப்படி ட்விட்டரை திணறடித்து வரும் நிலையில், தமிழ் சினிமாவின் பலம் கண்டு பாலிவுட்டே மிரண்டு போய் பார்த்து வருகிறது. மற்ற நடிகர்களின் ரசிகர்கள் எல்லாம் இந்த டிரெண்டிங்கை பார்த்து மெய் மறந்து போயுள்ளனர்.
|
டாப் டக்கர் சண்டை
மேலும், இதில், யாருக்கு எத்தனை லட்சம் ட்வீட்கள் வந்தது என்கிற போட்டியும் விஜய், அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அந்த அந்த நேரத்துக்கு ஏற்றது போல ஒவ்வொரு ஹாஷ்டேக்கும் முதலிடத்தை பிடித்தும், கீழ் இறங்கியும் ட்விட்டரில் கலக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.