For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சூர்யா 42 பூஜைக்கு.. அஜித், விஜய், எலான் மஸ்க் எல்லாம் வந்துருக்காங்களா.. தெறிக்கும் போட்டோ மீம்ஸ்!

  |

  சென்னை: நடிகர் சூர்யாவின் 42வது படத்தின் பூஜை சென்னையில் உள்ள ராமாபுரத்தில் இன்று நடைபெற்றது.

  Recommended Video

  Thalapathy Vijay | அடுத்த படத்தின் Title இதுதானா? வெறித்தனமா இருக்கே! *Kollywood

  நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், நடிகை திஷா பதானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  இந்நிலையில், அஜித், விஜய், எலான் மஸ்க் இன்னும் பல சர்ப்ரைஸ் விருந்தினர்கள் பங்கேற்றதாக மீம் போட்டு நெட்டிசன்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.

  சூர்யா 42 படத்துக்கு பூஜை போட்டாச்சு.. சிறுத்தை சிவா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகப் போகுதா? சூர்யா 42 படத்துக்கு பூஜை போட்டாச்சு.. சிறுத்தை சிவா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகப் போகுதா?

  சிறுத்தை சிவா

  சிறுத்தை சிவா

  கார்த்தியின் சிறுத்தை படத்தை இயக்கிய சிவா அஜித்தின் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் மற்றும் ரஜினிகாந்தின் அண்ணாத்த உள்ளிட்ட படங்களை இயக்கினாலும், இன்னமும் சிறுத்தை சிவா என்றே அழைக்கப்பட்டு வருகிறார். சூர்யா 42 படத்துக்கு அவர் செம மாஸாக என்ட்ரி கொடுத்த போட்டோக்கள் தற்போது டிரெண்டாகி வருகின்றன. விஸ்வாசம் போல படம் மாஸ் கிளப்ப வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

  சூர்யா 42 லுக்

  சூர்யா 42 லுக்

  வணங்கான் லுக்கில் இருந்து சற்றே மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் சூர்யா தனது 42வது படத்தின் பூஜையில் பங்கேற்றுள்ளார். இன்று பூஜை போடப்படும் நிலையில், நாளை முதலே படப்பிடிப்பு ஆரம்பமாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. சூர்யாவின் வணங்கான் திரைப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் ரிலீஸ் ஆகும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

  விஜய் வந்துருக்காரா

  விஜய் வந்துருக்காரா

  சூர்யா 42 பட பூஜைக்கு பிரபலங்கள் வருகைத் தரும் நுழைவு வாயில் புகைப்படம் வெளியான நிலையில், நெட்டிசன்கள் ஏகப்பட்ட பிரபலங்களை அங்கே வருவது போல போட்டோ எடிட் செய்து மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். நடிகர் விஜய்யின் ஜில்லா பட ஸ்டில்லை ஒட்ட வைத்து விஜய் வந்திருக்காரு என கிண்டல் செய்து வருகின்றனர்.

  அஜித்தும் ஆஜர்

  அஜித்தும் ஆஜர்

  விஜய் மட்டுமின்றி நடிகர் அஜித், கமல்ஹாசன், பிரதமர் மோடி உள்ளிட்ட பல பிரபலங்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது போல போட்டோஷாப் செய்து சூர்யா 42 ஹாஷ்டேக்கை வேறலெவலில் டிரெண்ட் செய்து வருகின்றனர். கேரளாவுக்கு சிகிச்சை செல்ல நடிகர் அஜித் சென்றபோது உள்ள போட்டோவை எடிட் செய்து போட்டுள்ளனர்.

  பாகுபலி பிரபாஸ்

  பாகுபலி பிரபாஸ்

  தமிழ் சினிமா நடிகர்களை தாண்டி டோலிவுட்டின் டார்லிங் நடிகர் பிரபாஸையும் பாகுபலி பட கெட்டப்பில் நிகழ்ச்சிக்கு வர வைத்து விட்டனர். ராகுல் காந்தி, ஜிபி முத்து, காண்டிராக்டர் நேசமணி, சிங்கம், புலி, கரடி என எத்தனை போட்டோக்களை எடிட் செய்து போட முடியுமோ அந்த இடத்தில் கச்சிதமாக பொருத்தி தெறிக்கவிட்டு வருகின்றனர்.

  எலான் மஸ்க் என்ட்ரி

  எலான் மஸ்க் என்ட்ரி

  ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனர் எலான் மஸ்க்கையும் இந்த எடிட் ஆசாமிகள் விட்டு வைக்கவில்லை. கோட் சூட் போட்டு கெத்தாக சூர்யாவின் 42வது படத்திற்கான பூஜையில் அவரையும் அழகாக பங்கேற்க வைத்து விட்டனர். இவர்களின் எடிட் எங்கு போய் முடியப் போகிறதோ என சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.

  ஜானி சின்ஸும்

  ஜானி சின்ஸும்

  நாயகி திஷா பதானி, ஆபாச பட நடிகரான ஜானி சின்ஸ் என ஒருத்தரையும் விட்டு வைக்கவில்லை. மேலும், நெட்டிசன்கள் தங்களின் போட்டோக்களையும் எடிட் செய்து மரண சம்பவம் செய்து வருகின்றனர். சூர்யா 42 பட பூஜைக்கே இந்த ஓட்டு ஓட்டுகின்றனரே என சூர்யா ரசிகர்கள் டென்ஷனாகி உள்ளனர். கண்டிப்பாக போட்டி நடிகர்களின் அப்டேட் வந்தால் விட மாட்டார்கள் என்பது கன்ஃபார்ம்.

  English summary
  Vijay, Ajith, Elon Musk photo edit memes trending at Suriya 42 hashtag. Netizens creates several celebs photos and create memes after Suriya 42 pooja entry spot stills out on social media.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X