twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உங்கள் ஹீரோக்களை இப்படி சூப்பரா அசிங்கப்படுத்துறீங்களே .. எல்லை மீறிய ஆதிபுருஷ் அட்ராசிட்டிஸ்!

    |

    சென்னை: பிரபாஸின் ஆதிபுருஷ் படம் ஏகப்பட்ட பில்டப்களுடன் டீசர் வெளியிடப்பட்ட நிலையில், கடைசியாக அது ஒரு அனிமேஷன் படம் என்பதை அறிந்த ரசிகர்கள் அந்த படத்தை பங்கமாக கலாய்க்க ஆரம்பித்தனர்.

    ஆனால், ஆதிபுருஷ் படத்தை ட்ரோல் செய்வதை தாண்டி வேறுவொரு ட்ரோல் சோஷியல் மீடியாவையே சாக்கடையாக மாற்றி உள்ளது.

    அஜித், விஜய், சூர்யா, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், தனுஷ் என டாப் ஹீரோக்களை பத்து தல காமெடி ராவணனாக மாற்றி பங்கம் செய்து வருகின்றனர்.

    என்ன அண்டா சைஸ்ல இருக்காரு ஆதிபுருஷ்.. இவரு ராமரா.. பிரபாஸை ட்ரோல் செய்யும் ராம்சரண் ஃபேன்ஸ்! என்ன அண்டா சைஸ்ல இருக்காரு ஆதிபுருஷ்.. இவரு ராமரா.. பிரபாஸை ட்ரோல் செய்யும் ராம்சரண் ஃபேன்ஸ்!

    பாக்ஸ் ஆபிஸ் போட்டி

    பாக்ஸ் ஆபிஸ் போட்டி

    பாக்ஸ் ஆபிஸ் போட்டி காரணமாக ரசிகர்கள் சண்டையை நடிகர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்ததன் விளைவு தான் சோஷியல் மீடியாவில் இப்படியொரு இழிவான சண்டைகள் நடைபெறக் காரணமாக மாறி உள்ளது. எந்த நடிகர் பெரிய நடிகர், யாருக்கு முதல் நாள் வசூல் அதிகம், பாக்ஸ் ஆபிஸ் கிங் யாரு, நல்ல நடிகர் யாரு, விக் வச்சிருக்காரா இல்லையா, ஃபிட்டா இல்லாமல் தொப்பையும் தொந்தியுமா இருக்காரா, உயரம் குறைவு என பல வித பாடி ஷேமிங் ட்ரோல்கள் பறக்க காரணமே இந்த பாக்ஸ் ஆபிஸ் போட்டி தான் என்கின்றனர்.

    காமெடி பத்து தல

    காமெடி பத்து தல

    பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம் அனிமேஷன் திரைப்படமாக உருவானதை அறிந்ததும் அந்த படத்தை ட்ரோல் செய்ய ஆரம்பித்து, பின்னர் அதில், மற்ற நடிகர்களின் மோசமான போட்டோ மார்பிங் வைத்து காமெடி பத்து தல உருவாக்கி மிகப்பெரிய சோஷியல் மீடியா சண்டையே இளைஞர்கள் போட்டு வருகின்றனர்.

    உனக்கு மட்டும் தான் எடிட்டிங் தெரியுமா

    உனக்கு மட்டும் தான் எடிட்டிங் தெரியுமா

    ஒரு நடிகரை இழிவுப் படுத்த நினைத்து ஒரு கும்பல் கிளம்பினால், அந்த நடிகர் ரசிகர்கள், உங்கள் நடிகரையும் அதை விட கேவலமாக ட்ரோல் செய்து அசிங்கப்படுத்த மாட்டார்களா? உனக்கு மட்டும் தான் எடிட்டிங் தெரியுமா? எனக்கும் தெரியும் என ரசிகர்கள் மோதல் முன்னணி நடிகர்களை ரொம்பவே சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.

    விஜய்சேதுபதி சொன்னது

    விஜய்சேதுபதி சொன்னது

    சமீபத்தில் லயோலா கல்லூரியில் நடிகர் விஜய்சேதுபதி சோஷியல் மீடியா இளைஞர்களின் நேரத்தை திருடுது என்றும் ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இலவசமாக உங்களுக்கு சுதந்திரம் கொடுப்பதை போல கொடுத்து உங்களை வைத்தே விளம்பர வியாபாரத்தை ஜோராக நடத்தி வருகிறது என்று கூறியது தான் தற்போது நடந்து வருகிறது என நடுநிலை ரசிகர்கள் கண்டித்து வருகின்றனர்.

    நல்லா அசிங்கப்படுத்துறீங்களே

    நல்லா அசிங்கப்படுத்துறீங்களே

    உங்க ஹீரோவை வேற யாரும் அசிங்கப்படுத்தல, நீங்க தான் நல்லா அசிங்கப்படுத்துறீங்க, ஒருத்தன் ட்ரோல் செய்தாலும், உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தா அடுத்த ட்ரோல் செய்ய அவனே யோசித்து விட்டு அமைதியாகிடுவான். நீ எத்தனை மில்லியன், நான் எத்தனை மில்லியன்னு போட்டிப் போட்டு உங்க நடிகர்களை அசிங்கப்படுத்த ஆரம்பித்தா, ட்விட்டர் உள்ளிட்ட சோஷியல் மீடியாக்காரன் நல்லா உங்களை அடிக்க விட்டுட்டு கிளாடியேட்டர் படம் போல வேடிக்கை பார்த்து சம்பாதிப்பான் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

    English summary
    Vijay and Ajith fans Adipurush ridiculous meme fight crossing the limits and upsets the celebrities too. Other actors like Suriya, Dhanush, Mahesh Babu, Allu Arjun and more also suffers with the edited memes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X