யார் அந்த BIKILI...சஸ்பென்சை உடைத்து க்ளூ கொடுத்த விஜய் ஆன்டனி

சென்னை : கடந்த சில நாட்களாகவே சோஷியல் மீடியாவில் உலா வரும் யார் அந்த BIKILI என்ற கேள்விக்கு க்ளூ ஒன்றை கொடுத்து சஸ்பென்சை உடைத்துள்ளார் நடிகர் விஜய் ஆன்டனி. இருந்தாலும் இதற்கு என்ன அர்த்தம் என புரியாமல் அனைவரும் குழம்பி வருகின்றனர்.

கடந்த ஒரு வாரமாக சோஷியல் மீடியாவில், கருப்பு நிற போர்டில் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்ட, யாரு இந்த BIKILI என்ற போட்டோ அனைவரையும் மிகவும் யோசிக்க வைத்தது. அதைத் தொடர்ந்து BIKILI கிட்ட மாட்டிங்காதீங்க என்ற மற்றொரு போட்டோ வெளியிடப்பட்டது. இது ஏதோ படத்திற்கான ப்ரொமோஷன் என அனைவரும் யூகித்து விட்டனர். ஆனால் என்ன படம், யார் நடிக்கும் படம், இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என பலரும் கேட்டு வந்தனர்.

யாருப்பா அந்த பிகிலி

யாருப்பா அந்த பிகிலி

இன்னும் சிலர், தளபதி 66 பட டைட்டிலாக இருக்குமோ. இல்லையென்றால் ஏகே 61 பட டைட்டிலா என கேட்டு வந்தனர். ஆனால் வெகு சிலர் மட்டுமே இது விஜய் ஆன்டனி படமாக தான் இருக்கும் என்றனர். விஜய் படமான, அஜித் படமா, விஜய் ஆன்டனி படமா என அனைவரும் தலையை பிய்த்து கொண்டிருந்த சமயத்தில், அது தன்னுடைய படத்திற்கான ப்ரொமோஷன் தான் என்பதை விஜய் ஆன்டனியே மறைமுகமாக தெரிவித்து விட்டார்.

யாருக்கும் தெரியக்கூடாது

யாருக்கும் தெரியக்கூடாது

இன்று இதே விளம்பரம், BIKILI யோட எதிரி ANTI BIKILI என்ற வாசகத்துடன் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் ஆன்டனி, உங்க கிட்ட மட்டும் சொல்கிறேன். நம்மள தவிர்த்து, இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியக் கூடாது. BIKILI யோட எதிரி ANTI BIKILI என காலையில் பதிவிட்டிருந்தார்.

இப்பவே சொல்லுங்க சார்

இப்பவே சொல்லுங்க சார்

இதைத் தொடர்ந்து ANTI BIKILI யாருன்னு இன்னிக்கு evening 5 மணிக்கு சொல்றேன் என மற்றொரு பதிவையும் போட்டுள்ளார் விஜய் ஆன்டனி. இதனால் விஜய் ஆன்டனியின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பாக தான் இருக்கும். இது தான் டைட்டிலா அல்லது டைட்டிலுக்கான க்ளூவா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். அதோடு, 5 மணிக்கு நான் தூங்கிடுவேன் இப்பவே சொல்லுங்க என கேட்டு வருகின்றனர்.

யோகி பாபுவே கேட்டிருக்காரே

யோகி பாபுவே கேட்டிருக்காரே

யாரு சார் அது. எனக்கே பார்க்கனும் போல இருக்கு. வெயிட்டிங் அண்ணா. வெயிட்டிங் நண்பா. யாரு அந்த BIKILI என கமெண்ட் செய்து வருகின்றனர். நெட்டிசன்கள் மட்டுமின்றி நடிகர் யோகி பாபுவும் யார் அந்த BIKILI என கேட்டு வீடியோவுடன் ட்வீட் போட்டுள்ளார். ரசிகர்கள் மட்டுமின்றி, பிரபலங்கள் பலரும் BIKILI யார் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X