என்னப்பா இப்படி ஒரு பேரு...வித்தியாசமான டைட்டிலில் விஜய் ஆன்டனி
சென்னை : 2005 ம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் விஜய் ஆன்டனி. பல படங்களில் பணியாற்றி பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.பட்டிதொட்டியெல்லாம் அனைவரையும் குத்தாட்டம் போட வைத்த நாக்கு முக்கா பாடலுக்கு இசை அமைத்தது இவர் தான்.
தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை படத்தில் சிறிய ரோலில் நடித்து, நடிகராகவும் அவதாரம் எடுத்தார். பிறகு நான் படத்தின் மூலம் ஹீரோவானார். முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து இவர் நடித்த சலீம் படமும் இவரது நடிப்பை பேச வைத்தது. அதைத் தொடர்ந்து நடித்த பிச்சைக்காரன் படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

டைரக்டராகும் விஜய் ஆன்டனி
மாஸ் ஹீரோவாக உருவாகி உள்ள விஜய் ஆன்டனி, கோடியில் ஒருவன், திமிருபிடிச்சவன் உள்ளிட்ட படங்கள் மூலம் எடிட்டராகவும் அவதாரம் எடுத்தார். தற்போது பிச்சைக்காரன் 2 படத்தின் மூலம் டைரக்டராகவும் ஆகி உள்ளார் விஜய் ஆன்டனி. சமீபத்தில் தனது பிறந்தநாளன்று டைரக்டராகும் அறிவிப்பை வெளியிட்டார் விஜய் ஆன்டனி.

விஜய் ஆன்டனி படங்கள்
தற்போது கோடியில் ஒருவன், தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய் ஆன்டனி. தற்போது கமல் போக்ராவின் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் டைரக்டர் விஜய் மில்டன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் ஆன்டனி.

வித்தியாசமான டைட்டில்
இது ஏற்கனவே விஜய் ஆன்டனி நடித்த சலீம் படத்தின் இரண்டாம் பாகமாம். இதுவும் த்ரில்லர், ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் கதை வித்தியாசமாக இருக்கும் என்பதை காட்டுவதற்காக படத்தின் டைட்டிலையும் வித்தியாசமாக வைத்துள்ளனர்.

என்னப்பா இப்படி ஒரு டைட்டில்
விஜய் ஆன்டனி நடிக்கும் இந்த புதிய படத்திற்கு மழை பிடிக்காத மனிதன் என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தின் பூஜை, சென்னையில் உள்ள பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் இன்று நடைபெற உள்ளது. அத்துடன் படத்தின் ஷுட்டிங்கும் இன்றே துவங்கப்பட உள்ளதாம். தொடர்ந்து 20 நாட்கள் படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

விரைவில் அறிவிப்பு
விரைவில் ஹீரோயின், மற்ற நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர் உள்ளிட்ட விபரங்கள் அடுத்தடுத்த அப்டேட்டாக வெளியிடப்பட உள்ளதாம். துவக்கத்தில் சென்னையிலும் பிறகு மற்ற இடங்களிலும் ஷுட்டிங் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











