»   »  அடடே, இந்த விஷயத்தில் விஜய் ஆண்டனியும் அப்படியே விஜய் மாதிரி தானாம்!

அடடே, இந்த விஷயத்தில் விஜய் ஆண்டனியும் அப்படியே விஜய் மாதிரி தானாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஆண்டனியின் எளிமையை பார்த்து வியப்பாக உள்ளது என்று நடிகை அம்ரிதா தெரிவித்துள்ளார்.

படை வீரன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான அம்ரிதா விஜய் ஆண்டனியுடன் சேர்ந்து காளி படத்தில் நடித்துள்ளார். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இந்த படத்தின் 4 ஹீரோயின்களில் அம்ரிதாவும் ஒருவர்.

படம் பற்றி அம்ரிதா கூறியதாவது,

குடும்பம்

குடும்பம்

என் குடும்பத்தில் யாருமே சினிமா துறையில் இல்லை. பி.காம். படித்துள்ள நான் தான் என் குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்துள்ள முதல் ஆள். விஜய் ஆண்டனி சாரின் இசை மற்றும் நடிப்பை பார்த்து வியந்த எனக்கு அவருடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

எளிமை

எளிமை

பெரிய உயரத்தை தொட்ட போதிலும் விஜய் ஆண்டனி சார் தலைக்கனம் இல்லாமல் மிகவும் எளிமையாக உள்ளார். அவரின் எளிமையை பார்த்து வியப்பாக உள்ளது.

நட்பு

நட்பு

ஒரு நண்பனை போன்று பழகினார். என் நடிப்பை பாராட்டினார். அவரின் பாராட்டு எனக்கு உற்சாகத்தை அளித்தது. நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க பதட்டமாக இருந்தது. அப்போது அவர் தான் உதவி செய்தார்.

பெண் இயக்குனர்

பெண் இயக்குனர்

பெண் இயக்குனரின் படத்தில் நடித்தது சிறப்பான அனுபவம். கிருத்திகா இயக்கத்தில் நடித்தது எனக்கு வசதியாக இருந்தது. அவர் என்னை தொடர்ந்து ஊக்குவித்து நடிக்க வைத்தார் என்றார் அம்ரிதா.

வெற்றி

வெற்றி

விஜய் மிகவும் எளிமையானவர், அவர் தான் ஒரு பெரிய ஹீரோ என்ற பந்தாவே இல்லாதவர். ரொம்ப சிம்பிளாக இருப்பார். அவரின் எளிமையை பார்த்தால் பிரமிப்பாக இருக்கும் என்று அவருடன் நடித்த பல நடிகைகள் தெரிவித்துள்ளனர். தற்போது விஜய்யை போன்றே விஜய் ஆண்டனிக்கும் பாராட்டு கிடைத்துள்ளது.

English summary
Amritha, one of the leading ladies of Vijay Antony starrer Kaali directed by Kiruthiga Udhayanidhi said that the musician turned actor is very down to earth person.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X