Don't Miss!
- News
"தமிழ்நாட்டின் நலன் உங்கள் கையில்" அதிமுக தொண்டர்களை அலர்ட் செய்யும் திருமாவளவன்!
- Sports
விறுவிறுப்புக்கு நோ பஞ்சம்.. இந்தியா - நியூசி, முதல் டி20 போட்டி.. விருந்து படைக்கும் ராஞ்சி பிட்ச்!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கோடியில் ஒருவன் ரிலீஸ் தேதி அறிவிப்பு... உற்சாகத்தில் ரசிகர்கள் !
சென்னை : விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ராமச்சந்திர ராஜூ, பிரபாகர், கே.ஜி.எஃப் கருடா ராமச்சந்திர ராஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விஜய் ஆன்டனியின் பிச்சைக்காரன் 2 ... ஷுட்டிங் எப்போ ஆரம்பம்னு தெரியுமா ?

விஜய் ஆண்டனி
ஜீவாவின் டிஷ்யூம், படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. ஆனால், முதலில் வெளியானது சுக்ரன் படம்தான். அதனைத்தொடர்ந்து பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்தவர், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நான், படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்

கோடியில் ஒருவன்
இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கோடியில் ஒருவன். இவருக்கு ஜோடியாக ஆத்மீகா நடித்துள்ளார். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கு உதய குமார் ஒளிப்பதிவு செய்கிறார். எடிட்டிங் பணியை விஜய் ஆண்டனி கவனித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

பாடல்கள்
இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்களுக்கு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஒரு டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் அதிரடி நிறைந்த இந்த படத்தில் கே.ஜி.எஃப் பட புகழ் கருடா ராமசந்திர ராஜு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கொரோனாவால் தாமதம்
இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதமே முடிவடைந்ததை அடுத்து இப்படம் மே மாதம் 14ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. கொரோனாவில் 2வது அலை தீவிரமாகி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, திரையரங்கு மூடப்பட்டதால் படத்தை குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது இதையடுத்து, இந்த திரைப்படம் ஓடிடியில் வெளியிட பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும் படம் திரையரங்கில் மட்டுமே வெளியிடப்படும் என படக்குழு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

செப்டம்பர் 17ந் தேதி ரிலீஸ்
இந்த நிலையில் கோடியில் ஒருவன் திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிச்சைக்காரன்2
2016-ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதையடுத்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக அறிவித்தனர். முதல் பாகத்தை இயக்கிய சசி, வேறு படவேலைகளில் பிசியாக இருப்பதால், பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி இயக்க உள்ளார். இப்படத்தின் மூலம் விஜய் ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகிறார்.

பூஜை போட்டாச்சு
இப்படத்தை விஜய் ஆண்டனி இயக்குவதோடு மட்டுமல்லாமல் நடிப்பு, இசை, படத்தொகுப்பு, தயாரிப்பு உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்கிறார். இதையடுத்து பிச்சைக்காரன் 2, படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளது.