»   »  இன்னொரு ரஜினி படத் தலைப்பு காளி(லி)... இந்த முறை விஜய் ஆன்டனி!

இன்னொரு ரஜினி படத் தலைப்பு காளி(லி)... இந்த முறை விஜய் ஆன்டனி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

முன்னணி ஹீரோக்களுக்கு செம டஃப் கொடுக்கும் அளவுக்கு முன்னேறிவிட்ட விஜய் ஆன்டனியின் அடுத்த படத்தை இயக்குகிறார் கிருத்திகா உதயநிதி. இந்தப் படத்துக்கு காளி என பெயரிட்டுள்ளனர்.

காளி, ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் ஒன்று. ஐவி சசி இயக்கத்தில் 1980-ல் வெளியாகி கமர்ஷியலாக நல்ல வெற்றியைப் படம் இது. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் ரஜினியுடன் இணைந்து நடித்திருந்தார் சிரஞ்சீவி.

Vijay Antony movie gets a Rajini title

இந்தப் பெயரை முதலில் இயக்குநர் ரஞ்சித் தனது மெட்ராஸ் படத்துக்கு வைத்திருந்தார். பின்னர்தான் மாற்றிவிட்டார்.

இப்போது விஜய் ஆன்டனியின் படத்துக்கு சூட்டப்பட்டுள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு விஜய் ஆன்டனி நடிக்கும் படம் அண்ணாத்துரை. இந்தப் படத்தை ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். புது இயக்குநர் சீனுவாசன் இயக்குகிறார்.

இந்த இரு படங்களையும் முடித்துவிட்டு, கலைப்புலி தாணு தயாரிப்பில், சீமான் இயக்கும் பகலவன் படத்தில் நடிக்கிறார் விஜய் ஆன்டனி!

English summary
Vijay Antony's Krithika Udhayanidhi directorial has been titled as Kaali (1980 Rajini movie).

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil