»   »  பாடலில் சர்ச்சை... சைத்தான் ட்ரைலரை நீக்கினார் விஜய் ஆன்டனி!

பாடலில் சர்ச்சை... சைத்தான் ட்ரைலரை நீக்கினார் விஜய் ஆன்டனி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சைத்தான் படத்தின் ட்ரைலரில் இடம்பெற்றுள்ள பாடல் சிலருக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதால் அதை நீக்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் விஜய் ஆன்டனி.

விஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் 'சைத்தான்'. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அருந்ததி நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து இசையமைத்துள்ளார்.


Vijay Antony removes Saithan trailer

'சைத்தான்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. சமூக வலைத் தளங்களிலும் ஹிட்டடித்தது.


இந்த நிலையில் தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவு செய்து வைத்திருந்த 'சைத்தான்' பட டீசரை திடீரென நீக்கியுள்ளார்.


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 'நான் நடித்து வெளிவர இருக்கும் 'சைத்தான்' பட டீசர் வீடியோவின் இசையில் ஒலிக்கும் மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலையின் வரிகள், சமஸ்கிருத மந்திரம் ஒன்றின் சாயலை ஒட்டி இருப்பதால் சிலர் மனவருத்ததுக்கு உள்ளானதை நான் அறிந்தேன்.


அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அந்த வரிகளை உடனடியாக மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளேன். எனது யூடியூப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இன்று நீங்கள் 'சைத்தான்' டீசரை காண முடியாது. புதிய வரிகளுடன் பாடல் பதிவு செய்து, நாளை மாலை 7 மணிக்கு சைத்தான் டீசரை வெளியிடுகிறேன்,' என்று கூறியுள்ளார்.

English summary
Vijay Antony has suddenly removed Saithan movie trailer due to some issues with the promo song.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil