»   »  52 நாட்கள்.. 18 கோடி.. இது தெலுங்கு "பிச்சைக்காரன்" வசூல்!

52 நாட்கள்.. 18 கோடி.. இது தெலுங்கு "பிச்சைக்காரன்" வசூல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 'பிச்சக்காடு' என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம், 18 கோடிகளை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான 'பிச்சைக்காரன்' விஜய் ஆண்டனிக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

இந்த ஆண்டில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி ஹிட்டடித்த படங்களில் பிச்சைக்காரனும் ஒன்று. தமிழில் இப்படம் 15 கோடிகள் வரை வசூலித்து சாதனை படைத்தது.

பிச்சைக்காடு

பிச்சைக்காடு

தெலுங்கில் இப்படம் 'பிச்சக்காடு' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து மே 13 ம் தேதி 80க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் வாரத்தில் ஓரளவு சுமாரான வரவேற்பு இப்படத்துக்கு கிடைத்தது.

அ ஆ

அ ஆ

இதனால் 'அ ஆ' மற்றும் 'பிரமோத்சவம்' போன்ற படங்கள் வெளியானால் இப்படம் தூக்கப்படலாம் என்று டோலிவுட் வட்டாரங்கள் ஆரூடம் கூறின. ஆனால் இந்த 2 படங்களின் வருகைக்குப் பின்னும் 'பிச்சைக்காரன்' வசூல் பாதிக்கப்படவில்லை. சொல்லப்போனால் இப்படங்களின் வருகைக்குப் பின்தான் 'பிச்சைக்காரன்' வசூல் அதிகரித்தது.

52 நாட்கள்

52 நாட்கள்

52 நாட்கள் முடிவில் இப்படம் 18 கோடிகளை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதே வேகத்தில் சென்றால் விரைவில் 20 கோடிகளைத் தொடலாம் என்று திரையரங்கு வட்டாரங்கள் நம்பிக்கைத் தெரிவிக்கின்றன.

50 லட்சம்

50 லட்சம்

இப்படத்தின் தெலுங்கு உரிமையை வாங்கிய லட்சுமணன் சதலவாடா விளம்பரத்திற்கு ஒன்றரை கோடி, படத்திற்கு 50 லட்சம் என மொத்தமாக 2 கோடிகளை செலவு செய்திருந்தார். தற்போது படம் நன்றாக ஓடியதால் 13 கோடிகள் வரை அவருக்கு லாபம் கிடைத்திருக்கிறதாம்.

மொத்தத்தில் விஜய் ஆண்டனியின் 'பிச்சைக்காரன்' நம்பி வாங்கியவர்களை கோடிஸ்வரர்களாக மாற்றியிருக்கிறது......

English summary
Vijay Antony's Bichagadu Collect 18 Crores in Andra/Telangana Box Office.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil