விஜய் ஆண்டனியின் ‘கொலை’ ட்ரெய்லர் அப்டேட்: போஸ்டர் மாதிரியே ட்ரெய்லர்யும் சஸ்பென்ஸ் இருக்குதாமே

சென்னை: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, இப்போது முன்னணி நடிகராகவும் வலம் வருகிறார்.

Recommended Video

பேயை பாக்கறக்கு TIPS இருந்தா சொல்லுங்க! Vijay Antony funny speech *Kollywood

பிச்சைக்காரன் உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ள அவர் தற்போது இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில், விஜய் ஆண்டனியின் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'கொலை' படத்தின் ட்ரெய்லர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளராக கலக்கிய விஜய் ஆண்டனி

இசையமைப்பாளராக கலக்கிய விஜய் ஆண்டனி

தமிழில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ரஜா என முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இணையாக, விஜய் ஆண்டனியும் களத்தில் இறங்கினார். சூப்பரான மெலடி பாடல்களையும் கொடுத்துள்ள விஜய் ஆண்டனி, குத்து பாடல்கள் மூலம் இளைஞர்களிடம் பிரபலமானார். முன்னணி இயக்குநர்கள் மட்டுமின்றி, விஜய், தனுஷ், விஷால் போன்ற டாப் ஹீரோக்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

விஜய் ஆண்டனியின் ஹீரோ என்ட்ரி

விஜய் ஆண்டனியின் ஹீரோ என்ட்ரி

தான் இசையமைக்கும் பாடல்களில் அவ்வப்போது தலையை காட்டிய விஜய் ஆண்டனி, ‘நான்' படத்தில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் யாருமே எதிர்பார்க்காத வகையில் சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து அவர் நடித்த 'சலீம்', ‘பிச்சைக்காரன்' இந்த இரண்டு படங்களும் சிறப்பான வரவேற்பைப் பெற்றதுடன் ப்ளாக் பஸ்டர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தன.

உலகத் தரமான படம் கொலை

உலகத் தரமான படம் கொலை

நடிகனாக தொடர்ந்து பல படங்களில் பிஸியாக உள்ள விஜய் ஆண்டனி, தற்போது ‘கொலை' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'விடியும் முன்' படம் மூலம் கவனம் ஈர்த்த பாலாஜிகுமார், இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில், விஜய் ஆண்டனியுடன் ரித்திகா சிங், ராதிகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் பற்றி சமீபத்தில் பேசிய விஜய் ஆண்டனி, "கொலை உலகத் தரமான படம், இதில் நடித்தது பெருமையாக உள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

கவனம் ஈர்த்த மோஷன் போஸ்டர்

கவனம் ஈர்த்த மோஷன் போஸ்டர்

'கொலை' படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ளது. ரெட்ரோ ஸ்டைலில் மிகவும் வித்தியாசமாக உருவாகியிருந்த போஸ்டர்கள், நல்ல வரவேற்பை பெற்றன. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி விநாயக் என்ற டிடெக்டிவ் ஏஜென்ஸியாக நடித்துள்ளார். அதேபோல், ‘கொலை' படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகி, கவனம் ஈர்த்தது.

கொலை ட்ரெய்லர் ரிலீஸ்

கொலை ட்ரெய்லர் ரிலீஸ்

கொலை திரைப்படம் விஜய் ஆண்டனிக்கு சூப்பரான கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் 'நீர்க்குமிழோ' என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியிருந்தது. கார்த்திக் நேத்தா எழுதிய இப்பாடலை, சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். இதனைத் தொடர்ந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாளை (ஆக.15) மாலை 6 மணிக்கு, ‘கொலை' படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கண்டிப்பாக இந்த ட்ரெய்லர் சஸ்பென்ஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X